உலக கோப்பையில இந்தியா அடி வாங்கறது விராட் கோலிக்கு பண்ண வேலையாலதான் – பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பரபரப்பு பேச்சு!

0
3010
Viratkohli

இந்திய அணி இறுதியாக ஒரு உலகக் கோப்பை தொடரை வென்றது மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில்தான்!

அதேபோல் இந்திய அணி கடைசியாக ஐசிசி நடத்திய ஒரு தொடரை வென்றது, 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடரைதான்.

- Advertisement -

இதற்குப் பிறகு ஏறக்குறைய 10 வருடங்களாக இந்திய அணி உலகக்கோப்பை தொடர்களுக்கு சென்று நாக் அவுட்டு போட்டிகளில் தோற்று வெளியேறி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

முக்கியமான போட்டிகளில் முன்னணி வீரர்கள் ஆட்டம் இழந்தால் இந்திய அணி மொத்தமாக சரிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. முதல் மூன்று இடத்தில் விளையாடும் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் வெளியேறிய பிறகு, இந்திய அணியை இழுத்துப் பிடித்து காப்பாற்றும் அளவுக்கு அனுபவமும் திறமையும் கொண்டவர்கள் தற்பொழுது இல்லை.

மேலும் ரோகித் சர்மா கைகளுக்கு இந்திய அணியின் கேப்டன்சி வந்தது அவ்வளவு சுமூகமான முறையிலும் வரவில்லை. விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட உள்மோதல்களால், ஒருபக்கம் கிரிக்கெட் வாரியத்தால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார், இன்னொரு பக்கம் டெஸ்ட் வடிவத்தில் அவராகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

- Advertisement -

இப்படியான அணிக்குள் நிலவிய உள்குத்து பிரச்சனைகள் அணியை ஒரு சமமான நிலையில் வைக்கவில்லை. இதுவும் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாதிக்கும் ஒரு காரணமாக விராட் கோலியின் கேப்டன்சி விலகளுக்கு பின்னால் இருந்து வருகிறது.

தற்பொழுது 12 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தால், மீண்டும் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்கின்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே நிலவுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரஷித் லத்தீப் இது குறித்து கூறும் பொழுது ” விராட் கோலிக்கு என்று ஒரு நோக்கம் இருந்தது. அவர் வெற்றி பெற விரும்பினார். அதை நோக்கியே அவரது அணுகுமுறை அமைந்திருந்தது. ஆனால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். உள் பிரச்சனைகளால் அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஏனென்றால் அடுத்த கேப்டனுக்கு அவர் கேட்ட வீரர்கள் கிடைக்காமல் போய் இருக்கலாம். இல்லை அவர் கேட்ட வீரர்கள் கிடைக்கும் சிறப்பாக பயன்படுத்த முடியாமல் போய் இருக்கலாம்.

இப்போது இருக்கும் அணி நன்றாகத்தான் இருக்கிறது. இந்தியா அணிக்கு பிரச்சனை ஆரம்பிப்பதே முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் ஆட்டம் இழந்து நான்காவது பேட்ஸ்மேன் வரும்பொழுதுதான். முதல் மூன்று பேட்ஸ்மேன் 25 முதல் 30 ஓவர்கள் விளையாடும் பொழுது, இந்திய அணிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருப்பது இல்லை.

இவர்களால் ஷிகர் தவானை இந்த உலகக் கோப்பை தொடருக்கு அழைத்து வந்து கொண்டிருக்க முடியும். அவரை இடையில் கேப்டன் ஆகவும் இந்திய அணிக்கு தற்காலிகமாக கொண்டு வரவும் செய்தார்கள். ஆனால் அதற்குப் பின்பு அவரை வீசி விட்டார்கள். இப்படியான காரணங்களால்தான் இந்திய அணி உலக கோப்பையில் தடுமாறுகிறது!” என்று கூறியிருக்கிறார்!