10 ஆண்டு கழித்து ரோகித்துக்கு சோகம்.. ஜெய்ஸ்வால் கில் ஏமாற்றம்.. 17 பையனுக்கு செய்தது தவறு.. ரசிகர்கள் விமர்சனம்

0
1668
Rohit

இன்று துவங்கி உள்ள ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட போட்டிகளில் மும்பை அணிக்காக களம் இறங்கிய ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, பஞ்சாப் அணிக்காக விளையாடிய சுப்மன் கில் ஆகியோர் பெரிய ஏமாற்றம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய தேசிய அணிக்கு விளையாடாத பொழுதும் காயம் இல்லாத பொழுதும் இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று உத்தரவிட்டது. தற்போது இதன்படி கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்ட விராட் கோலி தவிர மற்ற எல்லோரும் இன்று தொடங்கிய ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறார்கள்.

- Advertisement -

மும்பை அணிக்கு சரிவு

இந்த நிலையில் இன்று மும்பை அணி ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜெய்ஸ்வால் 5 ரன் மற்றும் ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறி பெரிய ஏமாற்றம் கொடுத்தார்கள். குறிப்பாக ரோகித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பேட்டிங் மிகவும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணிக்காக இன்று விளையாட களம் இறங்கிய சுப்மன் கில்லும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார். ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு இந்திய நட்சத்திர வீரர்கள் வருகிறார்கள் என்பதால், இந்திய ரசிகர்கள் வருகை தருவார்கள் என சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் எடுத்ததும் மூன்று பெரிய இந்திய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

17 வயது இளம் வீரர்

மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக 17 வயது ஆயுஸ் மத்ரே மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுகின்ற காரணத்தினால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. நட்சத்திர வீரர்களுக்காக இளம் வீரர் தன்னுடைய இடத்தை மும்பை அணியில் இழந்திருக்கிறார்.

இதையும் படிங்க : முன்ன மாதிரி இல்ல.. இனி ஐபிஎல் ஆடும்போது என் முதல் கவனம் இது மட்டும்தான் – கருண் நாயர் பேட்டி

10 வருடம் கழித்து ரஞ்சி போட்டிக்கு வந்த கேப்டன் ரோகித் சர்மா 17 வயது இளம் வீரரின் இடத்தை பறித்து தவறு செய்து விட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். மேலும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -