ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் விஜய் ஹசாரே டிராஃபியில் கலக்கிய கருண் நாயர் இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களம் இறங்கி விளையாட இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணிக்காக விளையாடப் போகும் அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் கருண் நாயர்
விஜய் ஹசாரே டிராபியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர், தனி ஒரு ஆளாக நின்று சிறந்த வெற்றிகளை பெற்றுக் கொடுத்து தனது விதர்பா அணியை விஜய் ஹசாரே டிராபியின் இறுதி போட்டி வரை கொண்டு சென்றார். இந்தத் தொடரில் இதுவரை கருண் நாயர் ஒன்பது போட்டிகளில் விளையாடி 389.50 என்கிற மெகா சராசரியில் 779 ரன்கள் குவித்திருக்கிறார். தொடர்ச்சியாக கருண் நாயர் இந்தத் தொடரில் நான்கு சதங்களும் மொத்தமாக ஐந்து சதங்களும் அடித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரை பொருத்தவரை இந்த முறை டெல்லி அணிக்காக விளையாட ஒப்பந்தமாக இருக்கிறார். கடந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இவரை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட இருக்கும் நிலையில் கருண் நாயர் ஐபிஎல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல்லில் என்னுடைய திட்டம் இது ஒன்றுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நான் இப்போது விளையாடும் விதத்தில் சில மாற்றங்களை செய்துள்ளேன். நான் விளையாடும் ஷாட்கள் போல் இல்லாமல் என் வாழ்க்கை முழுவதும் அதே வகையான ஷாட்கள் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் நிறைய ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒவ்வொரு லெவன் அணியிலும் இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:4 ஓவர் 13 ரன் 4 விக்கெட்.. மார்க்கோ ஜான்சன் அசத்தல்.. பேட்டிங்கில் காப்பாற்றிய மார்க்ரம்.. 58 ரன்னில் பிரிட்டோரியா அணி தோல்வி
நான் எனக்குள் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறினால் அதற்குப் பிறகு திரும்பவும் இடம்பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்பதுதான். இப்போது எனக்கு நான் விளையாடும் அணியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது தான் முக்கியம். பின்னர் எனக்குள் இருக்கும் திறமையை கொண்டு நான் எந்த அணிக்குள் விளையாடினாலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்”என்று கூறியிருக்கிறார்.






