வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு இளம் திலக் வர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஓமன் நாட்டில் இந்த மாதம் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வழியில் வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசியக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தான் அணி சாம்பியன்
கடந்த எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மாவின் அட்டகாசமான பேட்டிங்கால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது. அதே சமயத்தில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. தற்போது எமர்ஜிங் ஆசியக் கோப்பை சாம்பியனாக பாகிஸ்தான் இருக்கிறது.
தற்பொழுது ஓமன் நாட்டில் நடைபெற இருக்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் வழக்கம்போல் ஆசியாவைச் சேர்ந்த பிரபல அணிகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெறுகின்றன.
திலக் வர்மா கேப்டன்
தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு இடம் கிடைத்தது ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் எமர்ஜிங் ஆசியக் இந்திய அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்த அணியில் அபிஷேக் சர்மா, சாய் கிஷோர், ஆயுஸ் பதோனி, ராகுல் சாகர் போன்றபிரபல வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.
எமர்ஜிங் ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :
இதையும் படிங்க : பும்ராவுக்கு மீண்டும் திடீரென துணை கேப்டன் பதவி.. பின்னணியில் இருக்கும் உண்மை காரணம்? – நடப்பது என்ன?
திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ராமன்தீப் சிங், அனுஜ் ராவத், பிரப் சிம்ரன் சிங், நேஹல் வதேரா, அன்ஷுல் கம்போஜ், ஹிருத்திக் ஷோக்கீன், ஆகிப் கான், வைபவ் அரோரா, ரசிக் சலாம், ராகுல் சாஹர் மற்றும் சாய் கிஷோர்.






