பும்ராவுக்கு மீண்டும் திடீரென துணை கேப்டன் பதவி.. பின்னணியில் இருக்கும் உண்மை காரணம்? – நடப்பது என்ன?

0
395
Bumrah

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான பின்னணி காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிசிசிஐ துணை கேப்டனை அறிவிக்கவில்லை. அதுவரையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பும்ரா இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில்தான் திடீரென மீண்டும் அவர் துணை கேப்டன் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் பதவி பற்றி பும்ரா

வேகப் பந்துவீச்சாளர்களால் கேப்டன் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்று பும்ரா கூறியிருந்தார். தனக்கு கேப்டன் பொறுப்பில் இருக்க விருப்பம் இருப்பதாகவும் அதே சமயத்தில் இதற்காக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் தான் சென்று போய் நிற்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவுக்கு அடுத்து பும்ரா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்கின்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக கொண்டு வந்தது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உள்ளேயே நிறைய சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மீண்டும் பும்ரா துணை கேப்டன் ஏன்?

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் ஏதாவது ஒரு போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 297/6.. டி20 வரலாற்றில் இந்தியா உச்சகட்ட சாதனை.. சாம்சன் சூர்யா மின்னல் வேக ஆட்டம்.. இமாலய ரன் குவிப்பு

எனவே ஆஸ்திரேலியாவுக்கு சென்று புதிய கேப்டனை கொண்டு வருவதற்கு தற்போது பும்ராவை மீண்டும் துணை கேப்டன் ஆக்கி இருக்கிறார்கள். மேலும் பெரிய தொடரில் கில் மாதிரியான ஒரு இளம் வீரருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்க வேண்டாம், அது சீனியர் வீரர்களை ஏதாவது மனதளவில் பாதிக்க செய்யலாம் என்று யோசித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மீண்டும் அவர்கள் பும்ரா இடம் திரும்பி இருக்கிறார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -