“இந்திய வீரர்கள் பாவம்.. கேர்ள் ஃப்ரண்ட் பிரியறதை விட கொடுமை!” – பாப் டு பிளிசிஸ் பரபரப்பு பேச்சு!

0
262
Faf

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களில் முன்னாள் கேப்டன் பாப் டு பிளிசிஸ் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. அதே சமயத்தில் பல ஏற்றத்தாழ்வுகளை கண்டது.

தனது நண்பர் ஏபி டிவில்லியர்ஸ் உடன் சேர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த போதிலும் கூட, வாய்ப்புகள் உடனடியாக கிடைத்துவிடவில்லை. ஆனால் ஏபி டிவில்லியர்ஸ் அந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் முக்கிய வீரராகவே மாறியிருந்தார்.

- Advertisement -

இப்படி தென்னாப்பிரிக்க அணிக்குள் வருவதற்கு முன்பாகவே பல சோதனைகளை சந்தித்த அவர், பிறகு கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி சாதித்ததோடு மட்டும் இல்லாமல், அணியின் கேப்டனாகவும் கொண்டுவரப்பட்டார்.

எல்லா தென் ஆப்ரிக்க வீரர்களுக்கும் இருக்கும் உலகக் கோப்பை தோல்வி வலி என்பதில் இருந்து இவராலும் தப்ப முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி மொத்த அணியினரையும் பாதித்தது. அதில் அதிக காயப்பட்டதில் இவரும் ஒருவர்.

தற்பொழுது இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது எப்படி இருக்கும் என்று தன்னால் உணர முடிகிறது என்று அது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் கூறும் பொழுது “உலகக் கோப்பை தோல்வியை கடப்பது என்பது ஒரு சவால். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி என்பது ஏற்பட்ட அனுபவத்திலிருந்து இந்திய வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் மன வலியை சமாளிக்க சிறிது காலம் எடுக்கும். இது காதலியுடன் பிரிந்து செல்வது போலானது. உங்களால் அதை உடனடியாக கடந்து செல்ல முடியாது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய விதம் மிக அபாரமாக ஆச்சரியப்படுத்தும்படி இருந்தது. நம்ப முடியாத அளவிற்கு விளையாடிய அவர்களும் இப்படித்தான் தங்களை நினைத்து இருப்பார்கள். இதன் காரணமாக உலகக் கோப்பை தோல்வியால் அவர்கள் மிகவும் மனமுடைந்து போயிருப்பார்கள்.

இதிலிருந்து வெளியில் வருவதற்கு சிறிது நேரம் எடுக்கும். மேலும் காலம் எல்லாத்தையும் சரி செய்து தரும். வெளிப்படையாகவே இந்திய அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அனுபவம் கொண்ட வீரர்கள் இளம் வீரர்களை நன்றாக நிர்வகிப்பதற்கு உதவி செய்வார்கள்!” என்று கூறி இருக்கிறார்.