ஆஸ்திரேலியா கேப்டன் தலையில் பயத்தை விதைத்தார் இந்திய கேப்டன் – அஜய் ஜடேஜா மாஸ் கருத்துக்கள்!

0
2046
Rohitsharma

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார்!

இதை அடுத்து நேற்று பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் அரை சதத்துடன் 76 ரன்களை ஒரு விக்கெட் இழப்பிற்கு எடுத்து இருந்தது. கே எல் ராகுல் விக்கட்டை இழக்க அஸ்வின் களத்திற்கு வந்திருந்தார்!

- Advertisement -

இன்று தொடர்ந்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் தனது ஒன்பதாவது சதத்தை அபாரமாக நிறைவு செய்தார். மொத்தம் 120 ரண்களை 212 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் எடுத்து ஆட்டம் இழந்தார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அவரது ஆட்டம் மிக அபாரமாக இருந்தது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா
” நேற்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் தலையில் பயத்தின் விதைகளை விதைத்த ரோகித் சர்மா இப்போது பழங்களை அறுவடை செய்ய வந்துள்ளார். நேற்று அவர் ஆட்டத்தை விட்டு கம்மின்சை முழுதாக வெளியேற செய்தார். இன்று அவரது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து முழுதாக ஆதிக்கம் செலுத்தினார்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ரோகித் சர்மா எப்பொழுதும் கூல் கஸ்டமர். அங்கும் இங்கும் சத்தம் இருந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் தன் பாதையில் பயணிக்கும் யானை போல் இருக்கிறார். ஆடுகளம் மேலும் கீழும் ஆக இருக்க விராட் கோலி இடம் அதற்கு ரியாக்ஷன் இருந்தது. ஆனால் ரோகித் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. இன்று அவரிடம் இருந்து நாங்கள் பார்த்தது மிகவும் அற்புதமானது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நேற்று அவர் வித்தியாசமான வேகத்தில் விளையாடினார். இன்று அவர் கொஞ்சம் ஸ்லோ ரேட்டில் சென்றார். ஆஸ்திரேலியா நன்றாக பந்து வீசியது என்று சொல்லலாம். ஆனாலும் அவர் அந்த நேரத்தில் வேறொரு ஜோனில் இருந்தார். தற்போதைக்கு அவரிடமிருந்து எந்த சலசலப்பும் இல்லை அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். ஆடுகளத்தில் எதுவுமே இல்லை என்பதைப் போல உணர்கிறார். ஆமாம் ஆடுகளம் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் ரோகித் சர்மாவை பார்க்கும் பொழுது எதுவுமே இல்லாதது போல் தெரிகிறது. அவர் இருக்கும் போது களத்தில் அமைதி பிரதிபலிக்கிறது” என்று கூறியுள்ளார்!