கேஎல் ராகுல் நிலைமைக்கு இந்திய தேர்வு குழுதான் காரணம் – சல்மான் பட் வெளியிட்ட புதுத் தகவல்!

0
54
Salman Butt

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதி வருகிறது!

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. வேகப்பந்து வீச்சுக்கு மிகச் சிறப்பாக ஒத்துழைத்த இந்த மைதானத்தின் ஆடுகளத்தில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 129 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 10 பவுண்டரி மற்றும் ஐந்து சித்தர்களுடன் மிட்சல் மார்ஷ் 65 பந்தில் 81 ரன்கள் குவித்து இருந்த நிலையில் மூன்றாவது விக்கட்டாக ஜடேஜாவிடம் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு அங்கிருந்து 59 ரண்களுக்கு மேலும் ஏழு விக்கட்டுகளை இழந்து 188 ரண்களுக்கு ஆஸ்திரேலியா அணி சுருண்டது.

இதற்கு அடுத்து விளையாடிய இந்திய அணி 83 ரன்களுக்கு ஐந்து விக்கட்டுகளை இழந்து அதற்கு அடுத்து ஒரு விக்கெட்டை உடனே இழந்தாலும் தோல்வி ஏற்பட அதிகபட்ச வாய்ப்பு இருந்த ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் கே எல் ராகுல் ஆறாவது விக்கட்டுக்கு வந்த ரவீந்திர ஜடேஜாவை வைத்துக்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி 91 பந்தில் 75 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து அணி வெற்றி பெறுவதற்கு பேட்டிங்கில் மிகப்பெரிய பங்கை செய்தார்.

- Advertisement -

சமீபகாலத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தனது பேட்டிங் ஃபார்மை இழந்த கே எல் ராகுல் வெளியில் இருந்து மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். சமீபத்தில் டெஸ்ட் துணை கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதோடு ஆடும் அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது இந்த நிலைக்கு இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவை மிக முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட் தற்பொழுது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சல்மான் பட் கூறும் பொழுது ” கே எல் ராகுல் தனது பேட்டிங் ஃபார்ம் சரிந்திருந்த மோசமான காலகட்டத்தின் போது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ராகுல் மீதான இந்த கடுமையான விமர்சனங்களுக்கு இந்திய தேர்வு குழுதான் காரணம் என்று நான் நம்புகிறேன். அவர் பார்மில் இல்லாத பொழுதும் அவரை அணிக்குள் கொண்டு வந்து தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அணியில் சுப்மன் கில் போன்ற இன்பார்ம் பிளேயர்கள் இருந்த பொழுதும், இந்திய தேர்வு குழுவினர் கேஎல் ராகுலை தொடர்ந்து தேர்ந்தெடுத்து விளையாடி அவர் பேட்டிங் பார்மில் இல்லாததை தொடர்ந்து அம்பலப்படுத்தினர். நீங்கள் உங்கள் வீரருக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும்தான், ஆனால் அதை நீங்கள் தகவல் தொடர்பு மூலமாகவும் செய்யலாம். இதற்காக அணியில் எடுத்து தொடர்ச்சியாக அவர்கள் பேட்டிங் ஃபார்மில் இல்லாத பொழுது விளையாட வைத்து நம்பிக்கை அளிக்க வேண்டியதில்லை. இப்படியான நேரத்தில் அவர்களை நீங்கள் வெளியில் வைத்தால், தேவையற்ற விமர்சனத்தில் இருந்து காப்பாற்றலாம் என்று கூறி இருக்கிறார்!