பாகிஸ்தான் அணியுடன் மோதும் இந்திய அணி இதுதான். வீரர்கள் விபரம் வெளியானது!

0
103
Indvspak

தற்போது உலகம் முழுவதும் ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் மீது கிரிக்கெட் ரசிகர்கள் கவனமாக இருந்தாலும் எழுகின்ற முக்கியமான கேள்வி என்பது, இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்பதுதான்!

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்ததில் இருந்து இந்த 15 பேர் கொண்ட அணியில் யாரெல்லாம் விளையாடக்கூடிய 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்கள். எந்த 11 பேர் மிகச் சிறந்த அணியாக இருப்பார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் என்றால் அணி எப்படி இருக்க வேண்டும்? இவர் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்? என்று பலவிதமான கருத்து விவாதங்கள் கிரிக்கெட் மேடைகளில் நடந்து கொண்டு இருந்தது.

- Advertisement -

விராட் கோலி ரவி சாஸ்திரி கூட்டணி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்டபிறகு, ரோகித் சர்மா ராகுல் ட்ராவிட் கூட்டணி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பொறுப்பிற்கு வந்ததற்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டின் முகம் குறிப்பாக இந்திய வலைப்பந்து கிரிக்கெட்டில் முகம் வெகுவாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.

முன்பு இருந்ததைப் போல் இல்லாமல் விழும் விக்கெட்டுகளை பற்றி கவலைப்படாமல் தாக்குதல் பாணியில் தொடர்ந்து அடித்து ஆட வீரர்கள் ஊக்கப்படுத்த படுகிறார்கள். மேலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பல வகையான வீரர்களை உள்ளே கொண்டுவந்து பல வகையான கூட்டணிகளை உருவாக்கி பல வகையான பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை முயற்சிகள் எல்லாமே அந்தந்த ஆட்டங்களுக்கு மட்டுமே என்று இல்லாமல், எதிர்காலத்தில் ஒரு வலுவான இந்திய அணியை உருவாக்கும் பொருட்டு தொலைநோக்கு இந்த கூட்டணியால் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இளம் வீரர்களுக்கும் மட்டுமே வாய்ப்பு தராமல், இந்திய அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் போன்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் உருவாக்கும் அணி என்பது ஒரு வீரர்களை மட்டும் நம்பியோ, ஒரே ஒரு அணியை மட்டும் நம்பியோ விளையாடும் போக்கு கிடையாது. ஒரு அணியில் எல்லா வீரர்களும் முக்கியமானவர்கள் அதேபோல் தொடர்ந்து ஒரே அணியாக விளையாடுவது இல்லாமல் பல வீரர்கள் மாற்றி மாற்றி விளையாடும் முறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

தற்போது இதனால் தான் இப்பொழுது வரை சர்மாவுடன் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள்? அணியில் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள்? ஆடும் அணியில் இடம் தினேஷ் கார்த்திக்குக்கா அல்லது ரிஷப் பண்ட்க்கா? என்று பல கேள்விகள் ரசிகர்களை தாண்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் இருக்கிறது.

தற்போது துவங்க இருக்கும் போட்டிக்கான டாஸில் இந்திய அணி வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது. பாகிஸ்தான் அணியுடன் மோதும் இந்திய அணி கீழே…

ரோகித் சர்மா – கேஎல் ராகுல்
விராட்கோலி – சூர்யகுமார் யாதவ்
ஹர்திக் பாண்டியா – தினேஷ் கார்த்திக்
ஜடேஜா- புவனேஸ்வர் குமார்- அர்ஸ்தீப் சிங் – ஆவேஸ்கான் – சாகல்