தோனிக்கு முன்பே ஏழாம் எண் ஜெர்ஸியுடன் ஆடிய இந்திய வீரர் யார் தெரியுமா ?

0
409
MS Dhoni Jersey Number 7
(Photo by Adrian DENNIS / AFP)

கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமாகி மொத்த இந்திய கிரிக்கெட்டின் போக்கையும் மாற்றியவர் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. ஐசிசி நடத்தும் முக்கிய தொடர்களில் எல்லாம் கோப்பை வெல்வதே கனவாக இருந்த காலத்தில், தான் விளையாடும்போது தனது அணியை மூன்று முறை ஐசிசி கோப்பை தொடரில் வெற்றி வாகை சூட வைத்தவர் கேப்டன் தோனி. அதுமட்டுமல்லாது ஒருநாள் கிரிக்கெட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்து அசத்தியுள்ளார் தோனி.

மற்ற விளையாட்டுகளைப் போலவே கிரிக்கெட்டிலும் வீரர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஜெர்சிக்கு பின்னால் தங்களுக்கு விருப்பமான எண்ணை போட்டுக்கொள்வார்கள் ஒரு சில வீரர்கள் அணிந்திருக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும் உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர் அணிந்த பத்து என்ற எண் கொண்ட ஜெர்சி இப்போது வரை மிகவும் பிரபலம். அதேபோல் விராட் கோலி 18 ரோஹித் சர்மாவுக்கு 45 என ஜெர்ஸி எண்கள் உள்ளன.

- Advertisement -

அதேபோல முன்னாள் இந்திய கேப்டன் டோனிக்கும் 7 என்ற ஜெர்ஸி நம்பர் இருந்தது. ஏழாவது மாதம் ஏழாம் தேதியில் பிறந்த நாள் ஏழு என்ற எண்ணை வைத்து இருப்பதாக அப்போது கூறப்பட்டது. தோனி புகழின் உச்சத்திற்கு சென்று கொண்டே இருந்ததால் இந்த ஏழு என்ற எண் கொண்ட ஜெர்சிம் அதிக பிரபலம் அடைந்தது. ஏழு என்ற எண்ணை பார்த்தாலே தோனியின் பெயர் ஞாபகம் வருமளவுக்கு புகழ் இந்த ஜெர்சிக்கு இருந்தது.

ஆனால் தோனிக்கு முன்பே இந்த ஜெர்சியை ஒருவர் அணிந்திருக்கிறார். அதுவும் இந்திய வீரர் ஒருவர் அணிந்திருந்தது பெரிய ஆச்சரியம்தான். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தான் அந்த வீரர். இந்திய வேகப்பந்து வீச்சு டிபார்ட்மெண்ட் ஜாகீர்கானிடம் செல்வதற்கு முன்பு இந்திய வேகப்பந்து வீச்சின் தலைவராக விளங்கியவர் ஜவகல் ஸ்ரீநாத்.

ஸ்ரீநாத் இற்கு பிறகு இந்த ஜெர்ஸி நம்பரை பயன்படுத்தியது தோனி மட்டும்தான். தோனிக்கு பிறகு இந்த நம்பரை யாருக்கும் தரக்கூடாது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. காரணம் தோனியின் நம்பருடன் மற்றொரு வீரர் விளையாடுவதை ரசிகர்கள் விரும்பவில்லை. ஏற்கனவே சச்சினின் 10 என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடியதற்கு ஷர்துல் தாகூருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

- Advertisement -