இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய வீரர்கள்- ட்வீட்டர் லிங்க்!

0
379
Aus vs Eng

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் 22ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக, கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது!

இந்தியாவில் இருந்து நேராக சென்று மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பெர்த் மைதானத்தில் இந்திய அணி முகாமிட்டுள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு பயிற்சி போட்டிகளை முடித்துக்கொண்டு, டி20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உடன் வழங்கப்பட்டுள்ள இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.

நேற்று முன்தினம் பெர்த் மைதானத்தில் பெரிய ஓட்டப்பயிற்சி உடன் முதல் பயிற்சி ஆரம்பித்த இந்திய அணி, நேற்று முறையான முதல் பயிற்சி அமர்வை ஆரம்பித்தது. இதில் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் என இரு தரப்பினரும் பங்கு கொண்டார்கள்.

தற்பொழுது இந்திய அணி முகாமிட்டிருக்கும் பெர்த் மைதானத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் டி20 போட்டியில் மோதி வருகின்றன. இந்தப் போட்டியை இந்திய வீரர்களான அஸ்வின், சாகல், ஹர்ஷல் படெல் ஆகியோர் நேரில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, காயத்தில் இருந்து திரும்பிய கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் இருவரது அதிரடி அரைசதங்களால் 208 ரன்கள் குவித்துள்ளது. தற்பொழுது டேவிட் வார்னர் அரை சதத்துடன் ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை துரத்தி வருகிறது!