தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்.. விலகும் இந்திய நட்சத்திர வீரர்.. காரணம் என்ன.?

0
1276

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட முழுமையான தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக நேற்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்ற இந்தியா அணி டர்பன் நகரை சென்று அடைந்திருக்கிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத உள்ள மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் வருகின்ற 10ஆம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த முறை தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியா ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டிலுமே தோல்வி அடைந்து தென்னாப்பிரிக்காணியிடம் தொடரை இழந்தது.

- Advertisement -

இந்த முறை நிச்சயமாக தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா சென்று இருக்கிறது இந்தியா. இந்த முறை இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட் களுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமித்திருக்கிறது. டி20 போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளுக்கு கே.எல். ராகுலும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய டி20 அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களை இடம் பெற்று இருக்கின்றனர். கடந்த சில தொடர்களாக அவர்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர் டி20 தொடரில் இருந்து விலக இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த வீரரே நேரடியாக பேட்டியிலும் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் பௌலிங் ஆல்ரவுண்டரான தீபக் சஹார் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் டி20 போட்டியில் இந்திய அணியில் இணைந்தார். முகேஷ் குமாருக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற இவர் இறுதி இரண்டு டி20 போட்டிகளுக்கும் தக்கவைக்கப்பட்டார். இந்நிலையில் கடைசி டி20 போட்டிக்கு முன்பாக அவரது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இந்திய அணியில் இருந்து வெளியேறினார். இதனை அந்தப் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியின் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தார் தீபக்சஹார். எனினும் அவர் இந்திய அணியுடன் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்லவில்லை. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தனது தென்னாப்பிரிக்க பயணம் குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பேசி இருக்கும் தீபக் சஹார் ” எனது தந்தை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை தற்போது தேதி வருகிறது. எனினும் இந்த நிலையில் அவரை விட்டுச் செல்ல எனக்கு மனமில்லை. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செல்வேன். எனது தந்தையின் உடல் நலம் அனைத்தையும் விட முக்கியமானது. கிரிக்கெட் எனது தந்தையால் எனக்கு கிடைத்தது தான். அவரை இந்த நிலையில் விட்டுச் செல்ல எனக்கு மனமில்லை. இது தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழுவினரிடமும் பேசினேன். எனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தென்னாப்பிரிக்காவிற்கு செல்வேன்” என தெரிவித்திருக்கிறார்.