ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் திரும்பவும் தடுமாற்றமான முறையில் விளையாடி வருகிறது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி திரும்ப ஸ்லிப் திசையில் கேட்ச் ஆகி வெளியேறி இருக்கும் நிலையில் இது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
திரும்பவும் தவறு செய்யும் விராட் கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதலில் 445 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு களம் இறங்கி விளையாடிய இந்திய அணி 51 ரன்கள் குவிப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி பதினாறு பந்துகளை எதிர் கொண்டு மூன்று ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஹாசில் வுட் பந்துவீச்சில் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை விளையாட முற்பட்டபோது ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் விராட் கோலி இதே முறையில் ஆட்டம் இழந்த நிலையில் தற்போது அதே தவறை இந்த போட்டியிலும் செய்திருப்பது கிரிக்கெட் விமர்சகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோலியை இப்படி பார்த்ததே இல்லை
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு விராட் கோலி தடுமாறுகிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அது தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக தெரிகிறது. 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் விராட் கோலி இதே பிரச்சினையை எதிர்கொண்ட போது விராட் கோலி பேட்டிங்கில் மாற்றங்களை செய்தார். ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த தொடங்கினார்.
இதையும் படிங்க:ப்ளீஸ் அதை ஜெய்ஸ்வால் கிட்ட யாராவது சொல்லுங்க.. ஆஸியில் இதை செய்யவே முடியாது – புஜாரா அறிவுரை
தனது நிலைப்பாட்டை மாற்றி சிறப்பாக பேட்டிங் செய்தார். இருப்பினும் அவருக்கு அதே பிரச்சனை தற்போது மீண்டும் வருகிறது. இப்போதும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துக்கு மீண்டும் அதே தவறை செய்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்றைய போட்டியில் விராட் கோலி ஒரு பவுன்சரை கண்டு ஆச்சரியமடைந்தார். அவர் பந்து வருவதற்கு முன்பாகவே பேட்டை மூடினார். நல்ல வேலையாக தப்பித்தார் இல்லை எனில் பந்து வீசிய பந்து வீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறி இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.






