பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு அடுத்த மாதம் இந்தியா வருகிறது. இந்த நிலையில் இந்த தொடர் குறித்து தனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் கிடையாது என இந்திய இளம் டெஸ்ட் வீரர் சர்பராஸ் கான் கூறியிருக்கிறார்.
உள்நாட்டு போட்டியில் 70-க்கும் மேற்பட்ட ரன் சராசரியில் அபாரமாக விளையாடிய சர்பராஸ் கானுக்கு கொஞ்சம் தாமதமாக இது ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் கிடைத்தது. இதை பயன்படுத்தி மொத்தம் ஐந்து இன்னிங்ஸ் விளையாடி அதில் மூன்று அரை சதங்கள் அடித்து தன்னை நிரூபித்தார்.
அதேவேளையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவருமே அணியில் இல்லாத காரணத்தினால்தான் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர்கள் மீண்டும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் சர்பராஸ் கான் கூறும் பொழுது “நான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தற்பொழுது பார்க்கவில்லை. ஆனால் நான் என்னுடைய செயல்முறையை பின்பற்றி எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இந்த முறையை மழையின் காரணமாக மும்பையில் என்னால் பயிற்சி பெற முடியவில்லை. போட்டியின் பயிற்சிதான் எப்பொழுதும் சிறந்தது. வீட்டிற்குள் பயிற்சி செய்வது எனக்கு பிடிக்காத ஒன்று. பயிற்சியை சிறந்த முறையில் செய்வதுதான் நம்மை மேம்படுத்தும்.
சில கிரிக்கெட்டர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் சீக்கிரமே பிரேக் கிடைக்கிறது. சிலர் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. என்னை பொருத்தவரையில் நான் நீண்ட காலம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடியதால் என்னுடைய பேட்டிங் திறமையை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் அறிமுகமான பொழுது முதல் மூன்று பந்துகளில் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். பிறகு நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவேன் அதேபோல்தான் விளையாடினேன். என் விஷயத்தில் தெளிவாக இருந்த நான் எதிரணியையோ அல்லது எதிரணி வீரர்களையோ பார்க்கவில்லை.
இதையும் படிங்க : வெறும் 139 ரன்.. இங்கிலாந்து ஏ சின்ன பசங்களிடம் சிக்கிய இலங்கை அணி.. பரிதாப ஆரம்பம்
எனக்கும் என் தந்தைக்கும் ஒரு கனவு இருந்தது. அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான பொழுது அது நிறைவேறியது. ஆனால் அந்த கனவு அத்தோடு முடிந்து விடக்கூடாது. என்னால் முடிந்த வரையில் அந்தக் கனவை நீட்டிக்க வேண்டும். மேலும் அதற்காக நான் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






