வெறும் 139 ரன்.. இங்கிலாந்து ஏ சின்ன பசங்களிடம் சிக்கிய இலங்கை அணி.. பரிதாப ஆரம்பம்

0
417
Srilanka

இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியே இலங்கை அணிக்கு சோகமாக அமைந்திருக்கிறது.

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி மிகவும் நம்பிக்கை உடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றது. மேலும் ஜாக் கிரவுலி மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் என்பது கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் நேற்று துவங்கிய பயிற்சி போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.

இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் நிஷான் மதுஷ்கா 11 ரன், திமுத் கருணரத்தினே 26 ரன்கள் எடுத்து வெளியேற்றினார்கள். இதற்கு அடுத்து குசால் மெண்டிஸ் 12, அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 11, தினேஷ் சண்டிமால் 12, தனஞ்செய டி சில்வா 2, சமரவிக்ரமா 8 என தொடர்ந்து சொற்ப ரன்னில் வெளியேறினார்கள்.

- Advertisement -

பேட்டிங் வரிசையில் எட்டாவதாக வந்த பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 20 ரன், மிலன் ரத்னாயகே 17 ரன்கள் எடுக்க, இலங்கை அணி ஒரு வழியாக 100 ரன்கள் கடந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சில் ஜமான் அக்தர் 5, ஜோஸ் ஹல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி அபாரமான முறையில் விளையாடி 324 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஹம்சா ஷேக் 91, அல்ட்ரீஜ் 78 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 3 பார்மெட்டுக்கும் ஒரே கோச்.. காரணம் கம்பீர் சொன்ன அந்த விஷயம் தான்.. என்னால தடுக்க முடியல – ஜெய் ஷா விளக்கம்

இந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியில் வீரர்களின் அதிகபட்ச வயது 25, குறைந்தபட்ச வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் கூட இந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறவில்லை. இருந்தபோதிலும் இலங்கை அணி முதல் பயிற்சி போட்டியிலேயே இங்கிலாந்து இளைஞர்களிடம் சிக்கி மோசமாகச் சுருண்டு இருக்கிறது!

- Advertisement -