4 ஓவர் 13 ரன் 4 விக்கெட்.. மார்க்கோ ஜான்சன் அசத்தல்.. பேட்டிங்கில் காப்பாற்றிய மார்க்ரம்.. 58 ரன்னில் பிரிட்டோரியா அணி தோல்வி

0
121

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகள் மோதி விளையாடின.

இதில் சன்ரைசர்ஸ் அணியின் அபாரமான ஆட்டத்தால் 52 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியை மீட்ட கேப்டன் மார்க்ரம்

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பிரிட்டோரியா அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ஆனால் தொடக்கத்திலேயே முதல் நான்கு வீரர்கள் விரைவிலேயே வெளியேறியதால் சன்ரைசர்ஸ் அணி சிக்கலில் மாட்டிக் கொண்டது. 9.5 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே குவித்து பெரிய பிரச்சனையில் இருந்த சன்ரைசர்ஸ் அணியை கேப்டன் மார்கரம் மற்றும் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் சரிவிலிருந்து மீட்க போராடினார்கள்.

ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மார்கரம் 55 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 68 ரன்கள் குவித்தார். அவரோடு இணைந்து சிறப்பாக விளையாடிய மார்க்கோ ஜான்சன் 20 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு அதிரடியாக விளையாடிய லியாம் டவுசன் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 25 ரன்கள் அடித்ததால் சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பிரிட்டோரியா அணியை வீழ்த்திய மார்க்கோ ஜான்சன்

விக்டோரியா அணியில் அதிகபட்சமாக போஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பிரிட்டோரியா அணி களம் இறங்கியது. ஆடுகளம் பந்துவீச்சுகு சாதகமாக அமைந்ததால் விக்டோரியா அணியும் சிக்கலில் மாட்டியது. 4.4 ஓவர்களில் 28 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் மிடில் வரிசையில் களம்பிறங்கிய அக்கர் மேன் மற்றும் கீகன் லியான் ஆகியோர் ஓரளவு அடியை மீட்க போராடினார்கள்.

இதையும் படிங்க:நாங்க முதல்லயே இந்த தப்ப செஞ்சிட்டோம்.. எங்க அணி இதை முதலில் கவனிக்கணும் – ஜாஸ் பட்லர் பேட்டி

அக்கர் மேன் 25 ரன்கள் மற்றும் லியோன் 28 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழக்க அதற்குப் பிறகு விட்டோரியா அணியை காப்பாற்ற யாரும் செயல்படவில்லை. இதனால் 16.3 ஓவர்களில் விக்டோரியா அணி அடைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் மார்க்கோ ஜான்சன் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் சன்ரைசர்ஸ் 52 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -