பைனலில் இந்தியா.. எல்லா நாளுமே அழுதுகிட்டே இருந்தேன்.. கடவுள் எனக்காக போராடினார் – ஜெமிமா பேட்டி

0
75
Jemimah

நேற்று பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்டரிக்யூஸ், மிகவும் உருக்கமான முறையில் பேசி இருக்கிறார்.

தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்டரிக்யூஸ் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 134 பந்தில் 127 தங்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தினமும் அழுதேன்

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய ஜெமிமா ரோட்டரிக்யூஸ் கூறும்பொழுது “முதலாவதாக இந்த உலகக் கோப்பைக்கு நான் கடந்த ஆண்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டேன். பிறகு நான் மீண்டும் இந்த ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டேன். நான் நல்ல பார்மில் இருந்ததால் என்னால் செய்ய முடியும் என்று நம்பினேன். ஆனால் என்னால் எதையுமே கட்டுப்படுத்த முடியவில்லை. இருந்த போதும் என்னை சுற்றி என் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் இருந்தார்கள்”

“இந்த நாட்களில் கிட்டத்தட்ட நான் எல்லா நாளுமே அழுது கொண்டிருந்தேன். நான் மனதளவில் நன்றாக இல்லை. நிறைய பதட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். இறுதியாக நான் நினைத்ததெல்லாம் நான் ஆஜராக வேண்டும் என்பதுதான். மற்றதை எல்லாம் கடவுள் கவனித்துக் கொண்டார்”

- Advertisement -

எனக்காக போராடிய கடவுள்

“இந்த போட்டியின் ஆரம்பத்தில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பிறகு நான் எனக்குள் பேசிக் கொண்டேன். இறுதியில் நான் பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை நினைவு படுத்திக் கொண்டேன். நான் சக்தியை இழந்து விட்டதால் மிகவும் சோர்வாக இருந்தேன். அந்த வாசகம் என்னவென்றால் நீ தைரியமாக நில் கடவுள் உனக்காக போராடுவார் என்பதுதான். நான் அங்கேயே நின்றேன், கடவுள் எனக்காக போராடினார்”

இதையும் படிங்க : ஜெமிமா உன்னோடது என்ன மாதிரி ஒரு பேட்டிங்.. சாம்பியன் ஆஸிக்கு எதிரா நினைக்கவே முடியல – விராட் கோலி பாராட்டு

இந்திய அணி இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. தற்போது பெண்கள் அணி அதை செய்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்!

- Advertisement -