நேற்று பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பெண்கள் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையான அணியாக ஆஸ்திரேலிய இருந்து வருகிறது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அரையிறுதியில் ஒரே முறை மட்டுமே அதுவும் இந்திய அணிக்கு எதிராக மட்டுமே 2017 ஆம் ஆண்டு தோல்வி அடைந்திருந்தது.
பேட்டிங்கில் ரன் குவிப்பு
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணி லிட்ச்ஃபீல்டு சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி துவக்க வீராங்கனைகள் விக்கெட்டை சீக்கிரத்தில் எழுந்து அழுத்தத்தில் விழுந்தது.
இந்த நிலையில் ஜெமிமா ரோட்டரிக்யூஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரித் கவூர் இருவரும் சேர்ந்து 150 ரன்னுக்கும் மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதில் ஜெமிமா ரோட்டரிக்யூஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 134 பந்தில் 127 ரன் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.
விராட் கோலி பாராட்டு
இப்படியான சூழ்நிலையில் இந்திய பெண்கள் அணிக்கு வெளியிலிருந்து பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அசைக்க முடியாத ஆஸ்திரேலிய பெண்கள் அணியை இந்திய அணி நாக் அவுட் போட்டியில் வீழ்த்தியது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து விராட் கோலி தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : கம்பீர் திட்டத்தை நான் சொல்றேன்.. ஹர்ஷித்ராணா விளையாட காரணமே இதுதான் – சீக்ரெட் உடைத்த தினேஷ் கார்த்திக்
இதுகுறித்து விராட் கோலி தனது வாழ்த்தில் ” ஆஸ்திரேலியா போன்ற ஒரு வலிமையான அணிக்கு எதிராக எங்களுடைய அணி எப்படி ஒரு சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறது. பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த துரத்தல் மற்றும் ஜெமிமாவின் சிறப்பான செயல்திறன் அற்புதமாக இருந்தது. இது உண்மையான மீள்தன்மை, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. சபாஷ் இந்தியா!” என்று பாராட்டி இருக்கிறார்.






