தற்போது தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் ஒருவர் விலகுகிறார் என அதிகாரப்பூர்வ வெளிவந்திருக்கிறது. இந்தத் தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ள இந்திய அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என மூன்று போட்டிகள் முடிவில் முன்னிலை பெற்று இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றால் இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பில் இருக்கிறது.
முதலில் பும்ரா சந்தேகம்
இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் ஒருவர் உடல்நிலை மோசமடைந்த மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதால், அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்காமல் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் நான்காவது டி20 போட்டிக்கு வருவாரா? என்பது சந்தேகமான நிலையில்தான் இருக்கிறது. அவர் அகமதாபாத்தில் நடைபெறும் ஐந்தாவது போட்டியில் விளையாடுவதற்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ தரப்பில் செய்திகள் வந்திருக்கிறது.
நட்சத்திர வீரர் விலகல்
இந்த நிலையில் மூன்றாவது t20 போட்டியில் விளையாடாத இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு எந்த வீரரும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க : மோர்னே மோர்கல் என்னை மன்னிக்கணும்.. நிறைய நேரம் டிவில காட்ட வச்சுட்டேன் – அர்ஷ்தீப் சிங் பேச்சு
அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை மாறாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தினால் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். டி20 உலகக் கோப்பை அருகில் இருப்பதால் அவர் காயமடையாதது நல்ல விஷயமாக இருக்கிறது. அதே சமயத்தில் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைகிறது.






