இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பை தொடரை வென்றதும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எப்படியான பங்களிப்பை செய்திருக்கிறார் என்று இந்திய வீரர் அக்சர் படேல் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் பேட்டிங் வரிசையில் விக்கெட்டுகள் சீக்கிரம் செய்யும் போது அக்சர் படேல் முன்கூட்டி அனுப்பப்பட்டார். இதற்கு முன்பாகவும் இந்த முயற்சிகளை இந்திய அணி செய்திருக்கிறது. இது அக்சர் படேல் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்து ராகுல் டிராவிட் செய்த நகர்வு என்று இப்பொழுது தெரிய வருகிறது.
மேலும் இந்திய அணி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தடுமாறிய பொழுது அக்சர் படேல் நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரி உடன் 31 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். மேலும் பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபேவுக்கு முன்னால் அனுப்பப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ராகுல் டிராவிட் குறித்து அக்சர் படேல் பேசும்பொழுது “ராகுல் டிராவிட் அவர்களை நான் இந்திய ஏ அணிக்காக விளையாடிய போது இருந்து தெரியும். நான் அவருடன் நீண்ட நாட்கள் செலவு செய்திருக்கிறேன்.அவர் எனக்கு எப்பொழுதும் ஆதரவாக இருந்திருக்கிறார். மேலும் அவர் எனக்கு எப்பொழுதும் மனதில் நிலைத்திருக்கும் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். நம்முடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனை போட்டிகள் விளையாடினோம் எத்தனை ரன்கள் எடுத்தோம் என்பதை விட, நாம் என்ன மாதிரியான நினைவுகளை உருவாக்கி இருக்கிறோம் என்பது முக்கியம் என்று கூறினார்.
நீங்கள் ஒரு போட்டியில் நன்றாக விளையாடுகிறீர்கள் ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்து அதை ஞாபகத்தில் இருக்காது. ஆனால் நீங்கள் ஒரு உலகக் கோப்பையை வெல்லும் பொழுது அது உங்களுடைய ஞாபகத்தில் எப்பொழுதும் இருக்கும். அது ஒரு பீல்டிங் பதக்கமாக இருந்தாலும் கூட சிறப்பானதுஎன்று கூறினார். ரோகித் சர்மா சொன்னது போல ராகுல் டிராவிட் விளையாட்டின் ஒரு ஜென்டில்மேன்.
இதையும் படிங்க: இனி ரோகித் கோலி இடத்துக்கு இவங்கதான்.. மத்த ரெண்டு பசங்க நிலைமை பாவம் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேச்சு
அவர் எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் சத்தம் மற்றும் இசை என எதையும் தவறாக சொல்ல மாட்டார். அவருக்கு தகுந்தது போல் எங்களை மாற்ற அவர் நினைத்தது கிடையாது. எங்களுக்கு தகுந்தது போல அவர் தன்னை மாற்றிக் கொண்டவர். அவருக்கு தாங்கள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிரியாவிடை மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும். அவருக்கு அப்படி ஒன்றைத் தவிர வேறு எதையும் கொடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.






