ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 கிரிக்கெட் வீரர்கள்

0
3963
Stuart Clark and lisa sthalekar
ஸ்டூவர்ட் கிளார்க் மற்றும் லீசா ஸ்தலேகார்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆசியாவை சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் தற்போது பிரமாதமாக ஆடி வருகின்றனர். அவற்றில் பலர், மற்ற நாடுகளுக்காகவும் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்திய நாட்டைச் சேர்ந்த இஷ் சோதி நியூசிலாந்து டி20 அணியின் ஓர் முக்கிய அங்கமாக கருதப்படுகிறார்.

நம் இந்திய நாட்டில் திறமைக்கு என்றும் பஞ்சம் இருப்பதில்லை. வாய்ப்பிற்குத் தான் அனைவரும் ஏங்குகின்றனர். மற்ற நாடுகளின் குடியுரிமை பெற்று அவர்களது நாட்டுக்கு விளையாடவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு ஒரு சில வீரர்கள் அவர்களது பங்களிப்பை தந்துள்ளனர். அதில் அவுஸ்திரேலிய நாட்டிற்காக விளையாடிய வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

1. ஸ்டூவர்ட் கிளார்க்

இவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று வித ஃபார்ம்ட்டும் ஆடி இருக்கிறார். ஸ்டூவர்ட் கிளார்க், இதுவரை 24 டெஸ்ட், 39 ஒருநாள் போட்டி, ஒன்பது டி20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2005 முதல் 2009 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். ஸ்டூவர்ட் கிளார்க்கின் தந்தை ப்ரூஸ் சென்னையில் பிறந்தவர். அவரது தாயார் மேரி, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸை சேர்ந்தவர்.

2. குரிண்டர் சந்து

Gurinder Sandhu Australia

இந்தப் பட்டியலில் இருக்கும் மற்றொரு வலது கை வேகப்பந்து வீச்சாளர் குரிண்டர் சந்து. இவரது தற்போதைய வயது 28. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகள் விளையாடி இருக்கிறார். தன்னுடைய அறிமுகப் போட்டியில், பூர்வீக நாடான இந்தியாவிற்கு எதிராக தான் களமிறங்கினார். விளையாடிய இரண்டு போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பின்னர் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

3. ஜேசன் சங்கா

இவர் ஆஸ்திரேலிய யு-19 அணியின் முன்னாள் கேப்டன். 2018ல் ஆஸ்திரேலிய யு-19 அணியை வழிநடத்தினார் ஜேசன் சங்கா. இவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்பவர். பிக் பேஷ் லீக்கில், சிட்னி தன்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் இவர் இன்னும் கால் பாதிக்கவில்லை.

- Advertisement -

4. பரம் உப்பல்

இவரும் ஆஸ்திரேலிய யு-19 அணியில் விளையாடி இருக்கிறார். பின்னர், 2017 இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட இவருக்கு அழைப்பு கிடைத்தது. பரம் உப்பல், இந்திய நாட்டின் சட்டிஷ்கர் மாநிலத்தில் பிறந்தார். இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை ஸ்பின்னர். முதல் தர கிரிக்கெட்டில் பரம் உப்பல், இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

5. தன்வீர் சங்கா

சமீபத்தில் சர்வதேச ஆஸ்திரேலிய அணிக்குள் இவர் நுழைந்தார். ஜேசன் சங்காவைப் போல் இவரும் பிபிஎலில் சிட்னி தன்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வலது கை ஸ்பின்னரான தன்வீர் சங்கா, பிக் பேஷ் லீக்கில் சிறப்பாக பந்துவீசி சீனியர் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

6. லீசா ஸ்தலேகார்

இவர் வர்னையாளராக புகழ்பெற்றவர். பல முக்கிய போட்டிகளில் இவர் கமன்டரி செய்துள்ளார். வர்னையாளராக பணிபுரியும் முன் ஸ்தலேகார், ஆஸ்திரேலிய மகளிர் விளையாடிக் கொண்டிருந்தார். புனேவில் பிறந்த லீசா ஸ்தலேகார், ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 8 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டி மற்றும் 54 டி20 போட்டிகளில் பங்காற்றியுள்ளார்.