இந்திய அணியின் சரவெடி துவக்கம்!- ரோகித், கில் சிக்ஸர் மழை வீடியோ இணைப்பு !

0
903

நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் மட்டும் மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது . முதல் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்ற இந்திய அணி தொடரி கைப்பற்றி விட்டது

இவ்வேளையில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது . இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணிந்தது .

துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர் . முதல் ஐந்து ஓவர்களுக்கு நிதானமாக ஆடி அவர்கள் அதன் பிறகு தங்களது வழக்கமான அதிரடியை துவக்கினர்.

ஒரு ஓவருக்கு ஒரு சிக்சர் அல்லது இரண்டு பவுண்டரிகள் என்ற வீதத்தில் அதிரடியான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர் இந்திய அணியின் ஓப்பனர்கள். ரோகித் சர்மா ஒருபுறம் சிக்ஸர்களாக அடிக்க கில் மறுமுனையில் பவுண்டர்களின் மூலம் மூலம் தாக்குதல் நடத்தினார்.

அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் களம் கண்ட நியூசிலாந்து அணியின் ஜேக்கப் டஃபி வீசி ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தை கில் சிக்ஸருக்கு விரட்டினார். அதே ஓவரின் நான்காவது பந்தை ரோகித் சர்மாவும் சிக்ஸர் அடித்து இந்திய அணியின் அதிரடி துவக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். தற்போது இந்திய அணி 15 ஓவர்களுக்கு 127 ரன்கள் உடன் விக்கெட் இழப்பின்றி ஆடிக் கொண்டிருக்கிறது .

ரோஹித் சர்மா 71 ரன்கள்டனும் கில் 54 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர். இதுவரை ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் 5 இமாலய சிக்ஸர்களை அடித்திருக்கிறார்.