என் வேலைக்கு தோனியின் இந்த விஷயம் தேவை.. அவர் போலத்தான் என் பயணம் ஆரம்பித்தது – பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே பேட்டி

0
40

தற்போது பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சூடும் பிரிவில் இந்தியாவின் மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்வப்னில் குசலே பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

இவருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

- Advertisement -

சமீபத்தில் பெண்கள் பிரிவில் மானு பாக்கர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததைப் போலவே,தற்போது இந்தியாவின் 29 வயதான ஸ்வப்னில் குசலே இந்தியாவுக்காக வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னில் குசலே 2012ஆம் ஆண்டு முதலில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்திருக்கிறார்.

12 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஸ்வப்னில் குசலே, 50 மீட்டர் ரைபில் 3 பொசிசன்ஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்திருக்கிறார். இந்தியாவுக்காக சாதனை படைத்தவர்களின் பட்டியலில் இவரது பெயரும் நிச்சயம் இடம் பெறுகிறது. இவர் மகேந்திர சிங் தோனி போலவே தனது ஆரம்ப காலத்தில் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்த அவர் கூறும் போது “நான் சூட்டிங் உலகில் குறிப்பாக யாரையும் பின்பற்றுவதில்லை. அதற்கு வெளியே நான் தோனியின் அணுகுமுறையை பின்பற்றுகிறேன். களத்தில் அவரது அமைதியும், பொறுமையான குணமும் எனது துப்பாக்கி சுடுதலுக்கு முக்கியமான தேவையாக இருக்கிறது. அவரது கதையும் எனது கதையும் இது போலத்தான். அவரைப் போலவே நான் துப்பாக்கி சுடுதலுக்கு முன்பாக ஒரு டிக்கெட் சேகரிப்பாளராக வேலை செய்து இருக்கிறேன்.

நான் சுடும் ஒவ்வொரு ஷாட்டும் புதிய சாட் என்றே நினைத்துப் போட்டியில் கவனம் செலுத்துகிறேன். மேலும் நான் அமைதியாக இருக்க முயற்சித்தேன். முழு போட்டியிடும் எனது கவனம் சிதறாமல் ஒரே மனநிலையோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் உங்கள் மதிப்பெண்கள் குறித்து எதையும் யோசிக்காமல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025ல் ஆடுவீங்களா.?.. தோனி கொடுத்த பதில்.. சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி

குசலேவின் குடும்பத்தை பொறுத்தவரை அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தாயார் கம்பல்வாடி கிராமத்தின் சர்பஞ்சாகவும் உள்ளார். இதனால் இவரது முயற்சிக்கு குடும்பம் ஒரு பெரிய தடையாக இருக்கவில்லை. மேலும் பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மானு பாக்கர் வெற்றி பெற்றது குறித்தும் தனது பாராட்டை தெரிவித்தார்.

- Advertisement -