பாக் வீரரை மகன் என சொன்ன நீரஜ் சோப்ராவின் தாய்.. சோயிப் அக்தர் நெகிழ்ச்சி பதில்.. ஒலிம்பிக் 2024

0
15230

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று பாகிஸ்தான் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இதைத்தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் தனது மகன் போலத்தான் என்று கூறிய நீரஜ் சோப்ராவின் தாயார் கூறியதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்தார். இதைத்தொடர்ந்து தற்போது பாரிஸில் நடைபெற்ற வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா முதல் சுற்றிலேயே தகுதி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானார்.

இவரைத் தொடர்ந்து பல நாடுகளின் வீரர்களும் இறுதிப்போட்டிக்கு தேர்வான நிலையில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட நீரஜ் 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். ஆனால் பாகிஸ்தான் சார்பாக கலந்து கொண்ட அர்ஷத் நதீம் அவரைத் தாண்டி 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தினை தட்டிச் சென்றார். இந்த தூரமானது ஒலிம்பிக் தொடரின் மிகச் சிறந்த தூரமாக கணக்கிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தற்போது அர்ஷத் நதீமுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் தாயார் “இந்தியாவிற்காக நீரஜ் வெள்ளிப் பதக்கம் என்றாலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கம் வென்ற அர்ஷத் நதீமும் என் குழந்தைதான்” என்று கூறினார். இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் இது ஒரு தாயைத் தவிர வேறு யாராலும் கூற முடியாது என்று நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சோய பக்தர் கூறும்போது “தங்கம் வென்றவர் அவரும் எங்கள் மகன்தான். இதை ஒரு தாயால் மட்டுமே இது போன்று சொல்ல முடியும். ஆச்சரியமாக இருக்கிறது” என்று தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அக்தரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:பிசிசிஐ 3 பேர் கிரிக்கெட் வாழ்க்கையையே முடிச்சிட்டாங்க.. பிடிச்சவங்களுக்கு வாய்ப்பு – ஸ்ரீகாந்த் கோபம்

இந்தியா, பாகிஸ்தான் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், இது போன்ற மகிழ்ச்சியான கருத்துக்கள் இருநாட்டினருக்கும் மகிழ்வான தருணத்தை கொடுக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.