இந்திய கிரிக்கெட்

2025 இந்திய அணியின் முழு போட்டி அட்டவணை.. 3 பெரிய நாடுகளின் தொடர்கள்.. மொத்த பட்டியல்

இந்திய அணி அடுத்த ஆண்டு 2025ல் விளையாட இருக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கான முழு பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் இந்திய அணி 5 முக்கியமான பெரிய தொடர்களில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டின் கடைசி போட்டியில் மெல்போன் மைதானத்தில் இந்திய அணி விளையாடி தோற்று இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டின் முதல் போட்டியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர்களது மண்ணில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் சாம்பியன்ஸ் டிராபி

இதைத்தொடர்ந்து இந்திய அணி ஜனவரி மாதத்தில் இந்தியா வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுகிறது. இதில் 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் இருக்கின்றன.

இதற்கு அடுத்து இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது போட்டிகளை துபாயில் வைத்து விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பிப்ரவரி மாதம் பங்களாதேஷ் அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் முடிவடைந்து அதற்கு அடுத்து இந்திய அணி ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அதில் விளையாடும்.

- Advertisement -

2025 ஆம் ஆண்டு இந்திய அணியின் முழு அட்டவணை

இந்தியா – ஆஸ்திரேலியா, 5வது பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் – ஜனவரி 3-7 (சிட்னி)

இந்தியா vs இங்கிலாந்து (5 டி20, 3ஓடிஐ) — ஜனவரி- பிப்ரவரி 2025
முதல் டி20: ஜனவரி 22 (சென்னை)
2வது டி20: ஜனவரி 25 (கொல்கத்தா)
3வது டி20: ஜனவரி 28 (ராஜ்கோட்)
4வது டி20: ஜனவரி 31 (புனே)
5வது T20I: பிப்ரவரி 2 (மும்பை)

1வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 6 (நாக்பூர்)
2வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 9 (கட்டக்)
3வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 12 (அகமதாபாத்)

சாம்பியன்ஸ் டிராபி — பிப்ரவரி-மார்ச் 2025
இந்தியா – பங்களாதேஷ்: பிப்ரவரி 20 (துபாய்)
இந்தியா – பாகிஸ்தான்: பிப்ரவரி 23 (துபாய்)
இந்தியா – நியூசிலாந்து: மார்ச் 2 (துபாய்)
அரையிறுதி (தகுதி பெற்றால்): மார்ச் 4 (துபாய்)
இறுதி (தகுதி இருந்தால்): மார்ச் 9 (துபாய்)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (தகுதி பெற்றிருந்தால்) ஜூன் 2025 (லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்)

இந்தியா -இங்கிலாந்து (5 டெஸ்ட்) — ஜூன்-ஆகஸ்ட் 2025 (வெளியே)
1வது டெஸ்ட்: ஜூன் 20-24 (ஹெடிங்லி)
2வது டெஸ்ட்: ஜூலை 2-6 (எட்ஜ்பாஸ்டன்)
3வது டெஸ்ட்: ஜூன் 10-14 (லார்ட்ஸ்)
4வது டெஸ்ட்: ஜூன் 23-27 (மான்செஸ்டர்)
5வது டெஸ்ட்: ஜூலை 31-ஆகஸ்ட் 4 (ஓவல்)

இதையும் படிங்க : ஹெட் செஞ்சதுக்கு அவர விடக்கூடாது.. நிச்சயமா இந்த மாதிரி ஒரு தண்டனையை கொடுத்தே ஆகணும் – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

இந்தியா-பங்களாதேஷ் (3 ஓடிஐ, 3 டி20) — ஆகஸ்ட் 2025 (வெளியே)

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (2 டெஸ்ட்) — அக்டோபர் 2025

ஆசிய கோப்பை டி20கள் — அக்டோபர்-நவம்பர் 2025

இந்தியா vs ஆஸ்திரேலியா (3 ஒருநாள், 5 டி201) -நவம்பர் 2025 (வெளியே)

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா (2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20) நவம்பர்-டிசம்பர் 2025

- Advertisement -
Published by