இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தி ஹெட் கொண்டாடிய விதத்திற்கு, அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருக்கிறார்.
நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வந்த நான்காவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஹெட் களத்தில் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இதற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென கூறப்பட்டு வருகிறது.
ஹெட் கொண்டாட்டமும் விளக்கமும்
இந்திய அணி நேற்று போட்டியை டிரா செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்தது. இரண்டு செஷன் விளையாடி மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு ஏழு விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு மேலும் பதினைந்து ஓவர்கள் விளையாடினால் போட்டியை எதிரணி கேப்டன் டிராவில் முடித்துக் கொள்ள வந்து விடுவார் என்ற நிலைமை இருந்தது.
இப்படியான நிலைமையில் ஹெட் பந்துவீச்சில் ரிஷப் பண்ட் தேவையில்லாமல் ஆடி ஆட்டம் இழந்தார். இந்த நேரத்தில் ஹெட் ஒரு அருவருப்பான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ் நிரம்பி இருக்கும் டம்ளரில் விரலை வைத்து, அதையே தனது கொண்டாட்டத்தில் செய்ததாகவும் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் இதை பலரும் ஏற்கவில்லை.
கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும்
இந்த போட்டியை காண குழந்தைகள் பெண்கள் என பலரும் வருகை தருகிறார்கள். எனவே இப்படி அசிங்கமான செய்கைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும், இனி இப்படிப்பட்ட ஒன்றை செய்ய எவருக்கும் தைரியம் வரக்கூடாது என்றும், எனவே அதற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அனுபவ ஆஸி அணியை.. ஒரு சிறுவன் வழிநடத்த கூடாது.. சீனியர் பிளேயர்ஸ் இதை செய்யணும் – டேவிட் வார்னர் விமர்சனம்
” மெல்போன் டெஸ்டில் ஹெட்டின் அருவருப்பான நடத்தை ஜென்டில்மேன் விளையாட்டிற்கு நல்லது கிடையாது. குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் போட்டியை பார்க்கும் பொழுது இது மோசமான முன்னுதாரணம். அவருடைய இந்த நடத்தை ஒரு தனி நபரை மட்டும் அவமதிக்கவில்லை. 1.5 பில்லியன் இந்திய மக்களை அவமதித்து இருக்கிறது. எனவே அடுத்த முறை இப்படி யாரும் அருவருப்பாக நடந்து கொள்ள தைரியம் வராத வகையில் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






