இந்திய கிரிக்கெட்

222 ரன்.. யூசுப் பதான் யுவராஜ் அதிரடி.. சச்சினின் இந்திய மாஸ்டர்ஸ் அபார வெற்றி.. இலங்கை அணி சங்ககாராவின் போராட்டம் வீண்

இந்தியாவில் தற்போது சீனியர் வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வரும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியா மாஸ்டர்ஸ் லீக்

இந்தியாவில் தற்போது இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி மற்றும் குமார் சங்ககாரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. 20 ஓவர் கிரிக்கெட் தொடரான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராயுடு 5 ரன் மற்றும் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 10 ரன்னில் வெளியேறினாலும், குர்கிரித்சிங் 44 ரன்கள் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி 31 பந்துகளில் 68 ரன்கள் விலாச, இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய யூசுப் பதான் 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இதில் 3 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். யுவராஜ் சிங் 22 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது.

- Advertisement -

இந்திய அணி வெற்றி

தொடக்க ஆட்டக்காரர் தரங்கா 10 ரன்னில் வெளியேற, கேப்டன் குமார் சங்ககாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். திரிமண்ணே 17 பந்துகளில் 24 ரன்கள் மற்றும் குணரத்னே 25 பந்துகளில் 37 ரன்கள் குவித்து இலங்கை அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்கள். இதில் சிறப்பாக விளையாடிய குமார் சங்ககாரா 30 பந்துகளை எதிர் கொண்டு 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 51 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக இர்பான் பதான் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதையும் படிங்க:707 ரன்.. 2 அணிகளும் ரன் மழை.. பென் டக்கட் ஜாஸ் இங்கிலீஷ் சூறாவளி ஆட்டம்.. 5 விக்கெட்டில் இங்கி அணியை வீழ்த்தி ஆஸி வெற்றி

இறுதிக்கட்டத்தில் ஜே மெண்டிஸ் 17 பந்துகளில் 42 ரன்கள் குவிக்க இலங்கை அணி வெற்றி இலக்கை நெருங்குவது போல் தெரிந்தது. பின்னர் இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவர் வீசிய மிதுன் அந்த ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தினார். இதனால் இலங்கை அணி 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணித் தரப்பில் இர்பான் பதான் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -
Published by