707 ரன்.. 2 அணிகளும் ரன் மழை.. பென் டக்கட் ஜாஸ் இங்கிலீஷ் சூறாவளி ஆட்டம்.. 5 விக்கெட்டில் இங்கி அணியை வீழ்த்தி ஆஸி வெற்றி

0
518

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணி நிர்ணயித்த மெகா ரன்கள் இலக்கை அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

- Advertisement -

இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டி

லாகூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் களம் இறங்கிய நிலையில் அதன் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 10 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கட் தனது அபாரமான பேட்டிங்கின் மூலமாக ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சிதைத்துக் கொண்டு இருந்தார்.

இதற்கிடையில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஜோ ரூட் 68 ரன்கள் குவித்து சிறப்பாக தொடக்க வீரருக்கு கம்பெனி கொடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் விரைவாக வெளியேறினார்கள். இருப்பினும் தொடக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 143 பந்துகளை எதிர் கொண்டு 17 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 165 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஜாஸ் இங்கிலீஷ் அபாரம்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் இந்த முறை 6 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் ஸ்மித் 5 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷாட் உடன் ஜோடி சேர்ந்தார். 45 பந்துகளில் லபுஷேன் 47 ரன்கள் குவித்து வெளியேற, தொடக்க வீரர் மேத்யூ ஷாட் 63 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு மிடில் வரிசை பேட்மேன்கள் ஜாஸ் இங்கிலீஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதையும் படிங்க:பாபர் அசாம் உண்மையா நாட்டுக்காக விளையாடல.. அவருக்கு நாட்டை விட இதுதான் முக்கியம் – பாக் முன்னாள் வீரர் விலாசல்

இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 116 பந்துகளில் 146 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேரி 86 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 120 ரன்கள் குவித்தார். மறுமுனையில் அலெக்ஸ் கேரி 63 பந்துகளில் 69 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியாக மேக்ஸ்வெல் 15 பந்துகளில் 4 போர் மற்றும் 2 சிக்ஸ் என 32 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா அணி இறுதியாக 47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு அணிகளும் சேர்த்து 707 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -