185 ரன்.. வம்பிழுத்த கான்ஸ்டாஸ் பதிலடி கொடுத்த பும்ரா.. போலன்ட் 49 வருட சாதனை.. சிட்னி டெஸ்ட்

0
1189
Bumrah

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் சரிவை சந்தித்து இருக்கிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பும்ரா முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். புள்ளி விபரங்கள் முதலில் பேட்டிங் எடுப்பதையும், கண்டிஷன் முதலில் பந்து வீசும் படியும் இருந்தது. ஆனால் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாகவே அறிவித்தார்.

- Advertisement -

கில் கொடுத்த திருப்புமுனை

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் 4, ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து கில் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து 106 பந்தில் பொறுமையாக 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் கில் அவசரப்பட்டு முதல் செஷன் முடிவில் நாதன் லயனின் கடைசிப் பந்தில் இறங்கி வந்து விளையாடி 64 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இங்கிருந்து ஆஸ்திரேலியா அணி இரண்டாவது செஷனில் விராட் கோலி 17 ரன்கள் விக்கெட்டை கைப்பற்றியது.

- Advertisement -

போராடிய ரிஷப் பண்ட்

இதைத் தொடர்ந்து ஒரு முனையில் போராடிய ரிஷப் பண்ட் 98 பந்தில் 40 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 95 பந்தில் 26 ரன்கள் ஆட்டம் இழந்தார்கள். இறுதியில் கேப்டன் பும்ரா அதிரடியாக விளையாடி 17 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 72.2 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு வழக்கம்போல் பும்ரா முதல் செக் வைத்தார். உஸ்மான் கவஜா 10 பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் மீண்டும் வம்பு இழுக்க, அடுத்த இரண்டாவது பந்திலேயே கவாஜாவை வெளியேற்றி பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க : சச்சின் மாதிரி விராட் ஆட முடியாது.. ஏன்னா சச்சின் கிட்ட இந்த விஷயங்கள் இருந்தது – இர்பான் பதான் விளக்கம்

இந்தப் போட்டியில் நான்கு விக்கெட் கைப்பற்றியதின் மூலம் ஸ்காட் போலண்ட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐம்பதாவது விக்கெட்டை கைப்பற்றினார். 1975 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் பெவன் காங்ர்ன் தன்னுடைய 35வது வயது 10வது நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐம்பதாவது விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். ஸ்காட் போலண்ட் தனது 35 வது வயதில் 267வது நாளில் ஐம்பதாவது விக்கெட்டை கைப்பற்றி, அதிக வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 50வது விக்கெட்டை கைப்பற்றியவராக சாதனை படைத்தார்.

- Advertisement -