இந்திய கிரிக்கெட்

என்னுடைய மந்திரம் புரியாம இருக்கிங்க.. ரெண்டு வருஷமா என்ன நடந்துச்சுனே தெரியல – அர்ஷ்தீப் சிங் பேட்டி

இந்திய அணியின் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தன்னுடைய செயல்பாடுகள் பற்றியும், தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் பற்றியும் மிகவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி 33 ஆண்டுகளுக்குப் பிறகு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.

டிராவிட் – ரோகித் சர்மாவின் கண்டுபிடிப்பு

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக இறுதிக்கட்ட ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் 2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் அதே ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர்களில் விளையாட இந்திய அணிகள் வாய்ப்பு கிடைத்தது.

தனது வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அவர் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக வந்தார். இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு கடைசி கட்டத்தில் இவர் பந்து வீசிய விதமும் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

என்னுடைய மந்திரம் இதுதான்

தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசி இருக்கும் அர்ஷ்தீப் சிங் “நீங்கள் கண்டிஷன் மற்றும் மைதானத்தின் டைமென்ஷன், ஆடுகளத்தின் தன்மை ஆகியவைகளுக்கு சீக்கிரத்தில் உங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். வெவ்வேறு வழிகளில் எப்படி விக்கெட் எடுப்பது அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”

“நான் என்னுடைய ஆட்டத்தை ரசிக்கிறேன். இந்த இரண்டு வருடங்கள் எப்படி ஓடியது என்று எனக்கு புரியவில்லை. நான் எப்பொழுதும் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறேன். இந்த பயணத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கிறேன்”

இதையும் படிங்க : 88 ரன்.. நியூஸியை அடக்கி.. இந்தியாவுக்கு உதவிய ஆஸி அணி.. ஆனா ஒரு செக்.. மகளிர் டி20 உலக கோப்பை

“நிகழ்காலத்தை அனுபவிப்பதே என்னுடைய தராத மந்திரம். இன்று எனக்கு ஓய்வு நாள் நான் என்னுடைய ஓய்வை அனுபவிக்கிறேன். நாளை எனக்கு போட்டி நாள் அதில் வேலை செய்வேன். இப்படித்தான் என் வாழ்க்கை இருக்கிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற காரணத்தினால் நான் அது குறித்து எல்லாம் யோசிப்பதே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts