தற்போது யுஏஇ-ல் நடந்து வரும் மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஒரே சமயத்தில் இந்திய அணிக்கு சாதக பாதகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த காரணத்தினால், மேற்கொண்டு தன்னுடைய பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீராங்கனை மற்றும் கேப்டன் அலேசா ஹீலி 20 பந்தில் 26 ரன்கள், பெத் மூனி 32 பந்தில் 42, எல்லீஸ் பெரி 24 பந்தில் 34 ரன்கள், லிச்ஃபீல்டு 18 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள்.
இவர்களைத் தொடர்ந்து வந்த எந்த ஆஸ்திரேலியா வீராங்கனைகளும் இரட்டை இலக்க ரன்னை தொடவில்லை. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அமலியா கேர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
பந்துவீச்சில் கெத்து காட்டிய ஆஸ்திரேலியா
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு எல்லாமே மோசமாக அமைந்தது. அந்த அணிக்கு சூசி பேட்ஸ் 27 பந்தில் 20 ரன்கள், அமலியா கேர் 31 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீராங்கனைகள் யாரும் சராசரியான பங்களிப்பை கூட தரவில்லை. முடிவில் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றி பெற்றது. நியூசிலாந்து ரன் ரேட்டில் பெரிய அடி வாங்கியது.
நியூசிலாந்து அணியை பெரிய ரன் ரேட்டில் வீழ்த்தி இந்தியாவுக்கு ஓரளவுக்கு ஆஸ்திரேலியா சாதகத்தை உண்டாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்து இருந்தால், இந்திய அணி இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணியை வென்றால், அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலை இருந்தது. தற்போது இலங்கை மற்றும் அணிகளையும் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும், அதே சமயத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளின் ரன் ரேட்டையும் தாண்ட வேண்டும் என்று நிலைமை மாறி இருக்கிறது.
இதையும் படிங்க : கோலி உட்பட இதுவரை யாருமே செய்யாத சாதனை.. ஜோ ரூட் முதல் வீரராக ரெக்கார்ட்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் பிரிவு அணிகளின் புள்ளி பட்டியல் :
ஆஸ்திரேலியா – 2 வெற்றிகள் – 4 புள்ளிகள் – +2.524
பாகிஸ்தான் – 1 வெற்றி 1 தோல்வி – 4 புள்ளிகள் – +0.555
நியூசிலாந்து – 1 வெற்றி 1 தோல்வி – 2 புள்ளிகள் – மைனஸ் 0.050
இந்தியா – 1 வெற்றி 1 தோல்வி – 2 புள்ளிகள் – மைனஸ் 1.217
இலங்கை – 2 தோல்வி – 0 புள்ளிகள் – மைனஸ் 1.667