இந்திய டெஸ்ட் அணிக்கு புதிதாக வந்திருக்கும் வலதுகை வேகபந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் விராட் கோலியுடன் தனக்கு சமீபத்தில் ஏற்பட்ட சுவாரசியமான ஒரு சம்பவம் பற்றி கூறியிருக்கிறார்.
ஆகாஷ் தீப் பெங்கால் மாநில அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5வது போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு முதல் வாய்ப்பு இந்திய அணியில் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறப்பான முறையில் விக்கெட் கைப்பற்றினார்.
பெங்கால் வீரருக்கு மாற்றான பெங்கால் வீரர்
தற்போது காயத்தில் இருந்து வரும் இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பெங்கால் மாநில வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் எப்பொழுது மீண்டும் என்று எனக்கு திரும்பி வருவார் என்பது குறித்து இன்னும் யாராலும் உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை.
தற்போது முகமது ஷமிக்கு மாற்று வீரராக அவருடைய பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் தீப் பார்க்கப்படுகிறார். இருவருமே ஏறக்குறைய ஒரே மாதிரி பந்து வீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் இருவரிடமிருந்தும் பேட்ஸ்மேன் எதிர்பார்க்காத சிறந்த பந்துகள் விழ செய்கின்றன. இதன் காரணமாக எதிர்பாராத நேரத்தில் விக்கெட்டை எடுத்து வருகிறார்கள்.
ஆச்சரியப்படுத்திய விராட் கோலி
இந்த நிலையில் விராட் கோலி தனக்கு பேட் பரிசளித்தது பற்றி பேசி இருக்கும் ஆகாஷ் தீப் ” விராட் பையா அவரே வந்து எனக்கு தாமாக பேட் பரிசளித்தார். அவர் என் என் பேட்ங்கில் ஏதாவது கவனித்திருக்க வேண்டும். நான்அவரிடம் பேட் எதுவும் கேட்கவில்லை. இந்த நிலையில் அவரே வந்து உனக்கு பேட் வேண்டுமா? என்று கேட்டார். விராட் பையாவிடமிருந்து யாருக்குத்தான் பரிசாக பேட் வாங்க வேண்டும் என்று தோன்றாது.
இதையும் படிங்க : பும்ரா சிராஜ் ஷமி பெஸ்ட்.. ஆனா வெளிய ஒரு இந்திய பையன் இருக்கார்.. அவரும் வந்தா ஆஸி தோற்கும் – பாக் முன்னாள் வீரர் பேட்டி
அப்போது விராட் பையா என்னிடம் நான் என்ன வகையான பேட்டை பயன்படுத்துகிறேன் என்று கேட்டார். எனக்கு அப்பொழுது வார்த்தைகள் எதுவும் இல்லாததால் நான் சிரிக்க செய்தேன். அப்பொழுது நான் இந்த பேட்டில் விளையாட மாட்டேன். உனக்கு ஒரு பேட் தருகிறேன் என பரிசளித்தார். இதுவிராட் பையாவின் பெரிய பரிசு. இதை என்னுடைய அறையில் ஒரு நினைவுப் பொருளாக வைத்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.