பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய வேகப்பந்து வீச்சு துறை பாகிஸ்தானின் ஆரம்ப காலகட்ட வேகப்பந்து வீச்சு துறை போல மிகவும் வலிமையாக இருப்பதாக பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம் விராட் கோலி தலைமையில் அமைந்தது. அது தற்போது ரோகித் சர்மாவின் தலைமையின் கீழும் தொடர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய வேகப்பந்து எழுச்சி அடைந்திருப்பதுதான். இதன் காரணமாகவே வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியை வெல்வது மட்டுமில்லாமல் டெஸ்ட் தொடரையும் இந்திய அணியால் வெல்ல முடிகிறது.
திரும்பிய பழைய சேப்பாக் ஆடுகளம்
சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சிவப்பு மண்ணில் நல்ல பவுன்ஸ் கொண்ட ஆடுகளமாக ஆரம்ப காலகட்டங்களில் இருந்து வந்திருக்கிறது. பின் நாட்களில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான களிமண் கருப்பு ஆடுகளமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு மீண்டும் பவுன்ஸ் கொண்ட சிவப்பு மண் ஆடுகளமாக மாற்றப்பட்டது.
இந்த ஆடுகளத்தில்தான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்கள். பொதுவாக இந்தியாவில் வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை பார்க்க முடியாது. தற்போது நிலைமைகள் மாறி புதிய காலம் துவங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் லெஜெண்டுகள் போல இந்திய வீரர்கள்
இதுகுறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசிர் அலி கூறும் பொழுது “இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் செயல் படும் விதத்தை பார்க்கும் பொழுது வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் மற்றும் சோயப் அக்தர் மூவரும் ஒன்றாக இணைந்து விளையாடியது போல இருக்கிறது. மேலும் தற்போது முகமது ஷமி விளையாடாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது”
“இது மட்டும் இல்லாமல் அதிவேக இந்திய பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வெளியில் இருக்கிறார். அவர் மிகவும் அபாயகரமான வேகம் கொண்ட பந்துவீச்சாளர். மேலும் அவருடைய பவுன்சர்கள் மிகவும் துல்லியமானவை. எனவே நான் அவர் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவதை பார்க்க மிகவும் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : நியூஸி அணியை ஜெயிக்க காரணம்.. இதுக்கு முன்னால எங்களுக்கு கிடைச்ச அந்த வெற்றிதான் – இலங்கை கேப்டன் பேட்டி
இது மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலியாவிற்கு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கொண்டு வருவதற்கான ரகசிய திட்டங்களில் இறங்கி இருப்பதாக தெரிகிறது. அப்படி நடக்கும் பொழுது நிச்சயம் இந்திய அணி மிகவும் வலிமையானதாக ஆஸ்திரேலியாவில் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.