“2005-ல் இந்திய ரசிகர்கள் எங்கள் பஸ் மேல் கல் எறிந்தார்கள்” – பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி சர்ச்சை பேச்சு!

0
171

பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரராக விளங்கியவர் ஷாகித் அப்ரிதி. இவர் சனத் ஜெயசூர்யாவின் அதிவேக சதத்தை 37 பந்துகளில் முறியடித்ததன் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். தனது அதிரடியான ஆட்டம் மற்றும் பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை நாயகனாக விளங்கியவர் .

அந்த அணியின் கேப்டனாகவும் பணியாற்றிய ஷாகித அப்ரிதி தனது கிரிக்கெட் வாழ்வின் ஓய்விற்கு பிறகு கடந்த இரண்டு தொடர்களுக்கு பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆசிய கோப்பை விளையாடவில்லை என்றால் உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என பாகிஸ்தானின் விளையாட்டு துறை அமைச்சர் இக்ஸான் மானி தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் உன்னால் வீரர்களான ஷாஹித் அப்ரிதி மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடி ஜெயிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து பேசி இருக்கும் அப்ரிதி நிச்சயமாக பாகிஸ்தான் இந்தியாவிற்கு சென்று வெற்றியோடு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அழுத்தம் அதிகமாக இருக்கும். அதே நேரம் ஆழ்ந்த அழுத்தம் தான் போட்டிக்கான ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தப் போட்டியின் போது அவர்களது கடந்த கால இந்திய சுற்றுப்பயணங்களில் ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

கடந்த 25 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டிகள் வெற்றி பெற்று தொடர் சமணில் முடிவடைந்தது. இந்தத் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது .

- Advertisement -

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வீரர் யூனுஸ் கான் சிறப்பாக விளையாடி 261 ரன்கள் குவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் போட்டியை சுட்டிக்காட்டி பேசிய ஷாகித் அப்ரிதி” இந்தியாவில் விளையாடும் போது பௌண்டரி அல்லது சிக்ஸர் அடித்தால் யாருமே உங்களுக்காக கைதட்ட மாட்டார்கள். மேலும் நாங்கள் பெங்களூர் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு திரும்பும் போது கோபம் அடைந்த ரசிகர்கள் எங்களது பஸ்ஸின் மீது கல் வீசி தாக்கினார்கள். இந்தியாவில் நீங்கள் விளையாடும் போது இது போன்ற அழுத்தங்களும் கஷ்டமான சூழ்நிலைகளும் உருவாகும்.

ஆயினும் அவற்றை உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். முன்னதாக ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் இந்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்காததால் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதனைத் தொடர்ந்து ஹைபிரிட் முறையில் ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் இலங்கையில் 9 போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து தான் உலகக்கோப்பைக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆயினும் தற்போது பாகிஸ்தான் அணியின் விளையாட்டு துறை அமைச்சர் இந்தியா ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானில் விளையாடவில்லை என்றால் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இந்தியாவில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியிருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.