சச்சின் போட்ட ட்வீட்.. மரியாதை இல்லாமல் கமெண்ட் அடித்த ஆஸி., வீரர்!! உண்மையில் என்ன நடந்தது??

0
139

சச்சின் போட்ட ட்விட்டர் பதிவிற்கு ஆஸ்திரேலிய வீரர் மர்னஸ் லபுச்சானே மெண்ட் செய்தது மரியாதை இல்லாமல் இருக்கிறது என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இருந்து பல வீரர் மற்றும் வீராங்கனைகளும் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகின்றனர்.

- Advertisement -

காமன்வெல்த் போட்டிகளின் ஒரு அங்கமாக 1998ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகள் இருந்தது. இதில் சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன் சோயிப் அக்தர் போன்ற பல ஜாம்பவான் வீரர்களும் விளையாடி இருக்கின்றனர். அதன் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நீக்கப்பட்டது.

இதற்கு அப்போதைய காலத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் வந்தாலும், அதனை காமன்வெல்த் போட்டிகள் நடத்தும் நிர்வாகம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகள் இடம் பெறவில்லை.

இந்நிலையில் தற்போது முதல் முன்னேற்பாடாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்று நடைபெற்று வருகின்றன. இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அவர் தனது ட்விட்டர் பதிவில், “காமன்வெல்த் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்று இருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இதன் மூலம் புதுவித ரசிகர்களிடம் கிரிக்கெட் போட்டிகளை எடுத்துச் செல்ல முடியும் என நம்புகிறேன். இந்திய பெண்கள் அணிக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

சச்சினின் இந்த பதிவிற்கு ஆஸ்திரேலியா வீரர் லபுச்சானே பதில் அளித்த விதம் ரசிகர்கள் மத்தியில் தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பதில் அளித்த லப்புச்சானை “ஒப்புக்கொள்கிறேன் சச்சின். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி துவக்க போட்டியாக இருப்பது மேலும் மகிழ்ச்சியை கொடுக்கும்.” என குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கண்டு ரசிகர்கள், சச்சின் எத்தகைய பெரும் வீரர்; எவ்வளவு சாதனைகளை படைத்திருக்கிறார்; இதற்கு முன்னதாக காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் அறிமுகமாகி விளையாடியிருக்கிறார்; கிரிக்கெட் உலகின் கடவுள் எனவும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்வேறு நாடுகளில் உள்ள ரசிகர்கள் இவரை எத்தகைய உயரத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஆனால் இவை எதையும் மதிக்காமல் வெறுமனே சச்சின் என்று அழைக்கிறாய்; மரியாதையாக அவரை சச்சின் சார் என்று அழைப்பது நல்லது என அவருக்கு பதில் அளித்து பாடம் புகட்டி வருகின்றனர்.

காமன்வெல்த் போட்டிகளின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதின. கடைசி வரை போராடிய இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.