இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டி20 அணுகுமுறையில் இருப்பதாகவும், இதன் காரணமாக ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல முடியாது எனவும் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பெரிய அதிர்ச்சியை இந்திய ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் மிக மோசமான முடிவுகளை எடுத்து இருப்பதாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
20 விக்கெட் எடுக்க முடியுமா?
ஒரு டெஸ்ட் போட்டியை 500 ரன்கள் அடித்தாலும் தோற்பதற்கு வாய்ப்புகள் அதிகம், ஆனால் 20 விக்கெட்டுகள் எடுத்தால் வெல்வதற்கு மிகவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே பவுலிங் யூனிட்டை 20 விக்கெட்டுகள் கைப்பற்றும் அளவுக்கு அமைக்க வேண்டும் என்பதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாறாத மந்திரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து கண்டிஷனில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் மூன்று முக்கிய பவுலர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி என மூன்று ஆல்ரவுண்டர்களை தேர்ந்தெடுத்தது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. மேலும் குல்தீப் யாதவ் கட்டாயம் விளையாடியிருக்க வேண்டும் என்ற நிலையில், அவரை கழட்டிவிட்டது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
இது டி20 அணி கிடையாது
தற்போது அமைக்கப்பட்டிருக்கும் இந்திய பிளேயிங் லெவனில் 5 பேட்ஸ்மேன்கள், 1 விக்கெட் கீப்பர், 3, ஆல் ரவுண்டர்கள், 3 பவுலர்கள் இருக்கிறார்கள். இது டி20 வடிவத்திற்கான அணி அமைப்பு முறையாகும். இந்த அணுகு முறையில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது மிகவும் கடினம் என கிரிக்கெட் வல்லுனர்கள் டாம் மூடி மற்றும் சுப்ரமணியம் பத்ரிநாத் ஆகியோர் விமர்சித்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : கில் கம்பீர் செய்யற இதை ஏத்துக்கவே முடியாது.. இதெல்லாம் ஒரு டீம் செலக்சனா?.. கதை முடிஞ்சுது – ரவி சாஸ்திரி விமர்சனம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியார் கம்பீருக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே நல்ல திறமை இருப்பதாகவும், டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் அவருக்கு சரியான அணுகுமுறை இல்லை எனவும் இந்திய ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். மேலும் இதன் காரணமாகவே அவரது பயிற்சி என் கீழ் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளை சந்திக்கிறது என்பது அவர்களது வாதமாக இருக்கிறது. எனவே கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.






