இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் செய்த காரியம் ஒன்று இந்திய ரசிகர்களால் கடுமையான முறையில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்திற்கும் பந்துவீச்சுக்கு ஆறாவது பவுலர் ஆகவும் அணியில் இடம் பெற்றார்.
நான்கு ஓவர் பிரச்சனை
இந்த நிலையில் இன்று இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. இந்திய அணிக்கு பும்ரா, அர்ஸ்தீப், வருண் சக்கரவர்த்தி மற்றும் அச்சர் படேல் நால்வரும் தங்களுடைய முழு ஓவர்களையும் வீசி முடித்தார்கள். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து பதினாறு ஓவர்கள் வீசினார்கள்.
இதைத்தொடர்ந்து மீதி நான்கு ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு பந்துவீச்சாளர்களை வைத்து கேப்டன் சூரியகுமார் யாதவ் முடிக்க வேண்டியதாக இருந்தது. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பந்து வீசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.
சூரியகுமார் செய்த காரியம்
இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மீதம் இருந்த நான்கு ஓவரில் சிவம் துபேவுக்கு மூன்று ஓவர்களும், அபிஷேக் சர்மாவுக்கு ஒரு ஓவரும் சூர்யா குமார் யாதவ் கொடுத்தார். இதில் இந்த இருவரும் சேர்ந்து மொத்தம் 56 ரன்கள் 4 ஓவர்களில் கொடுத்தார்கள். வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியா அணியில் ஒரே ஒரு இடதுகை பேட்ஸ்மேன் ஹெட் மட்டுமே இருந்தார். அதற்கு அடுத்து அனைவரும் வலதுகை பேட்ஸ்மேன்கள் ஆகவே இருந்தார்கள். இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தரை பந்துவீச்சுக்கு சூரியகுமார் யாதவ் கொண்டு வரவே இல்லை. அதே சமயத்தில் அணி தேர்வு செய்யும் பொழுதே இந்த விஷயம் தெரியாதா? என கேள்வி முன் வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : டீமை மாத்தணுமா மாத்தறேன்.. ஆனா இந்த பிளானை மட்டும் விடவே மாட்டேன் – கம்பீர் காட்டிய பிடிவாதம்
முழுமையான பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இரண்டு ஓவர்கள் பந்து வீசி இருந்தால் கூட, அவரால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. வலதுகை பேட்ஸ்மேனுக்கு வலதுகை விரல் சுழல் பந்துவீச்சாளர் பந்து வீசக்கூடாது என்ற தவறான அடிப்படையில் சூரியகுமார் செய்தது இந்திய ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதற்கு அவரை தேர்வு செய்யாமல் எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணாவையே விளையாட வைத்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருக்கிறது.






