டீமை மாத்தணுமா மாத்தறேன்.. ஆனா இந்த பிளானை மட்டும் விடவே மாட்டேன் – கம்பீர் காட்டிய பிடிவாதம்

0
202
Gambhir

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் கம்பீர் தனது வழக்கமான ஒரு திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த போட்டியில் முதல் முறையாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் விளையாட சென்று விட்டதால் அவருடைய இடத்திற்கு சீன் அப்பாட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மொத்தம் மூன்று மாற்றங்கள்

இன்று மூன்றாவது டி20 போட்டிக்கு இந்திய அணியில் கட்டாயம் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்களால் கூறப்பட்டு வந்தது. குறிப்பாக குல்தீப் யாதவ் இடத்தில் அர்ஸ்தீப் விளையாட வேண்டும் என இந்திய ரசிகர்கள் வரை பலரும் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் இன்று அதிரடியாக சஞ்சு சாம்சன் இடத்திற்கு ஜிதேஷ் சர்மா, குல்தீப் யாதவ் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் என அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு கம்பீர் எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

- Advertisement -

மாறாத கம்பீர்

அதே சமயத்தில் கம்பீர் பேட்டிங் வரிசையை 8 வரையில் வைத்துக் கொள்வதற்காக மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை விளையாடும் தன்னுடைய வழக்கமான திட்டத்திலிருந்து மாறவே இல்லை. ஆஸ்திரேலியாவில் விளையாடும் பொழுது இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடுவேன் என பிடிவாதமாக இருக்கிறார்.

இதையும் படிங்க : இன்னைக்கு இந்திய ரசிகர்களை சைலண்ட் ஆக்கணும்.. உலக கோப்பையை தூக்கணும் – தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேட்டி

இன்று மூன்றாவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் இடத்தில் அர்ஸ்தீப் சிங் விளையாடினால் போதும் என்று இருந்தது. ஆனால் கம்பீர் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் நிச்சயம் கம்பீர் மீது விமர்சனங்கள் அதிகரிக்கும்.

- Advertisement -