2027 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி குறித்து தற்போது விவாதம் அதிகரித்துள்ளது. இதில் பிரசித் கிருஷ்ணாவின் செயல்பாடுகளை தேர்வாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குர்னூர் பிரார் திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும், அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரையும் மீண்டும் இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஷமி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் புவனேஷ்வர் குமாரும் வயது அதிகரித்தாலும் தனது சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். இதனால் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது, “பிரசித் கிருஷ்ணாவை அவர்கள் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். குர்னூர் பிரார் திறமையை காட்டியுள்ளார், ஆனால் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதால், ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரின் பெயர்களும் விவாதிக்கப்பட வேண்டும். ஷமி தொடர்ந்து சிறப்பாகவும் நிலையாகவும் செயல்பட்டு வருகிறார். புவனேஷ்வர் குமார் ஒரு சிறந்த வீரர். வயது அதிகரித்தாலும் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் அஜித் அகர்கர் தேர்வுக்குழுவில் இருந்து விலகினாலும், இந்திய அணி இந்த இரு வேகப்பந்து வீச்சாளர்களையும் மீண்டும் தேர்வு செய்யும் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.






