தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கில் மற்றும் இந்திய டெஸ்ட் அணியில் துவக்க அதிரடி ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இருவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தரும் முன்னுரிமையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு குறித்து இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த வருடம் ஆசியக் கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி டி20 வடிவத்தில் உலக சாம்பியன் ஆக இருக்கிறது. எனவே இந்த தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
டி20 அணியில் மாற்றங்கள்
இதற்கு முன்பாக சூரியகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய டி20 அணி செட்டப் மிகவும் அருமையாக இருந்து வருகிறது. அதிரடியான பேட்டிங் யூனிட் மற்றும் மிகச் சிறப்பான பவுலிங் யூனிட்டை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 2026 டி20 உலகக் கோப்பை வரையில் எந்த மாற்றமும் இருக்காது என்று பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கில்லை கொண்டு வருவதாக செய்திகள் பரவி வருகிறது. அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் வாய்ப்பு தரப்படாது என்று கூறப்படுகிறது. இதில் ஜெய்ஸ்வால் கில்லை விட அதிரடியாக விளையாட கூடியவர். கில் சர்வதேச டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு சரியானவரா என்று இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு
இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் கில்லை டி20 அணியில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்திய டி20 அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு துணை கேப்டனாக இருந்து வரும் அக்சர் படேலின் பதவியைப் பறித்து கில்லுக்கு கொடுப்பதாக வரும் செய்தியும் ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.
இதையும் படிங்க : கோலி கூட தோனியவே கம்பேர் பண்ண கூடாது.. இந்த பாபர பண்ணலாமா? – பாக் அகமத் சேஷாத் விமர்சனம்
இந்திய டி20 அணிக்கு மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஜெய்ஷ்வால் மிகவும் சரியானவராக இருப்பார் என்றும், கில் சரிப்பட்டு வர மாட்டார் என்றும் ரசிகர்கள் கருதுகிறார்கள். மேலும் ஜெயஸ்வால் மாதிரியான ஒரு வீரருக்கு இதுவரையில் ஒருநாள் இந்திய அணியிலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத போது, கில்லுக்கு எல்லா அணியிலும் இடம் கிடைப்பதோடு கேப்டன் பொறுப்பு வரையில் கொடுக்கப்பட்டு வருவது நியாயமானது இல்லை என எதிர்ப்புகள் உருவாகியுள்ளது.






