கோலி கூட தோனியவே கம்பேர் பண்ண கூடாது.. இந்த பாபர பண்ணலாமா? – பாக் அகமத் சேஷாத் விமர்சனம்

0
139
Virat

இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி உடன் யாரையுமே ஒப்பிடக்கூடாது என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். ஒரு அரை சதத்தைக் கூட அவரால் அடிக்க முடியவில்லை. மேலும் பாகிஸ்தான் அணியும் இந்த தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2023 ஆசியக் கோப்பை

தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு 2023 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை மிகவும் முக்கியமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது. அதுவரையில் பாபர் அசாம் தலைமையில் சிறிய அணிகளுக்கு எதிராகவும், மேலும் உள்நாட்டில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களிலும் விளையாடி வெற்றிகளை குவித்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக மீண்டும் பாகிஸ்தான் அணி மிகப் பெரிய எழுச்சி பெற்றதாக எழுதப்பட்டது.

இந்த நிலையில் ஆசிய கோப்பைக்கு வெளியில் வந்த பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் அப்பட்டமாக வெளியில் தெரிந்தன. மேலும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதைத்தொடர்ந்து அந்த அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற முடியாமல் தடுமாறி வருகிறது. மேலும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் மிகப்பெரிய பேட்டிங் சரிவை சந்தித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சதம் இல்லாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

தோனியவே ஒப்பிடக்கூடாது

இது குறித்து பேசி உள்ள அகமத் சேஷாத் கூறும் பொழுது ” எல்லாம் நல்லபடியாக பாகிஸ்தான் பக்கம் சென்று கொண்டிருந்த பொழுது இந்திய வீரர்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது சரியாக போகாத பொழுது ஒப்பிடுவது தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். விராட் கோலி உடன் உலகத்தில் எந்த வீரரையும் ஒப்பிட முடியாது. அவர் இந்த தலைமுறையின் ஜாம்பவான் வீரர்”

இதையும் படிங்க : 202 ரன் வித்தியாசம்.. பாகிஸ்தான் அணி படுதோல்வி.. ஷாய் ஹோப் அசத்தல் சதம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றது

“மேலும் விராட் கோலி உடன் தோனியை கூட ஒப்பிட முடியாது. தோனி கேப்டனாக இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி மிகவும் தனித்துவமான ஒரு மிகப்பெரிய வீரர். மேலும் நீங்கள் ஒரு வீரருடன் இன்னொரு வீரரை ஒப்பிடும் பொழுது அது அவருக்கு அழுத்தத்தை உண்டாக்கவும் வேலையாக அமைந்துவிடுகிறது. எனவே நீங்கள் யாரையுமே யாருடனும் ஒப்பிடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -