வெறும் வாய் வார்த்தையா.? உங்க ரூல்ஸை நீங்களே மீறலாமா.. இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் பேட்டி

0
111

அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் முன்னாள் ஆர்சிபி வீரரும், உள்நாட்டு கிரிக்கெட் வீரருமான ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி இந்திய அணியின் தேர்வு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விதமாக விஜய் ஹசாரே ட்ராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர் இந்திய அணியில் சேர்க்கப்படாதது அனைவரிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கருண் நாயர் இந்தத் தொடரில் 5 சதங்கள் அடித்து அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதாவது இந்திய சீனியர் வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி வரும் நிலையில் உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் சர்வதேச அணியில் சேர்க்கப்படாதது பிசிசிஐ மீது பல்வேறு விமர்சனங்களை தூண்டி இருக்கிறது. இந்திய அணியின் தேர்வு குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து உள்நாட்டு தொடரில் விளையாடி வரும் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவரது பார்மை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது உள்நாட்டு கிரிக்கெட்டை கட்டாயமாக்கும் உங்கள் சொந்த விதியை மீறுவது போன்றதாகும். அவருக்காக நான் வேதனை அடைகிறேன். 7 ஆட்டங்களில் 752 ரன்கள் குவித்தவருக்கு ஏன் விதிவிலக்கு அளிக்கக்கூடாது. அதாவது அவரது பார்மை பயன்படுத்துங்கள். கூடுதல் வீரராக அவரை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:ஆஸி டெஸ்ட்ல செஞ்ச அதே தப்பு.. இந்த 3 பேர் எடுக்க தேவை என்ன.. சாம்பியன்ஸ் டிராபி தொடர் – ஆகாஷ் சோப்ரா

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி ரிசர்வ் வீரர்களாக கில் உட்பட நான்கு பேரை எடுத்தது. 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தவன் குல்கர்ணி ரிசர்வ் வீரராக இருந்தார். ஜெய்ஸ்வால் கூடுதல் வீரராக இருந்தாரா? கில் அல்லது ரோகித் சர்மா காயம் அடைந்தால் கே எல் ராகுல் ஓபனிங் களமிறங்க முடியும். துபாய் போன்ற ஆடுகளங்களை இன்னிங்சை நடுநிலையில் உருவாக்க இவர் போன்ற ஒரு வீரர் தேவை எனவே இவரை 16 ஆவது வீரராக கருண் நாயரை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -