ஆஸி டெஸ்ட்ல செஞ்ச அதே தப்பு.. இந்த 3 பேர் எடுக்க தேவை என்ன.. சாம்பியன்ஸ் டிராபி தொடர் – ஆகாஷ் சோப்ரா

0
790

பாகிஸ்தானில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மூன்று சுழல் ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீர ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் தேர்வு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட இந்திய அணி

அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் பதினைந்து பேர் கொண்ட அணிகளை அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியும் நேற்று 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்த நிலையில் கவனிக்கத்தக்க விதமாக மூன்று சுழல் ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற மூன்று ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது இந்திய அணியின் பேட்டிங் நீளத்தை அதிகரிக்க, கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதே போன்று இந்திய அணி தேர்வு இருந்த நிலையில் தற்போது சாம்பியன் டிராபி தொடர்க்கும் இதே வகையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங்கில் நம்பிக்கையை காட்ட வேண்டும்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போதைய இந்திய அணிக்கு எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. இதனால் இந்திய அணி ஜடேஜா, அக்சார் மற்றும் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்திருக்கிறது. இதற்கு பதிலாக இந்திய அணி ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்திருக்கலாம். உங்களுக்கு ஒரு சுழல் பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்திருக்கலாம். இடது கையால் பேட்டிங் செய்யக்கூடிய மூன்று சுழல் பந்துவீச்சாளர்களில் இருவர் நான் இந்திய அணியில் விளையாடுவதை பார்க்கிறேன்.

இதையும் படிங்க:கருண் நாயர் மட்டுமல்ல.. இந்த 2 அதிரடி வீரர்கள செலக்ட் பண்ணாதது வருத்தம்தான் – சுரேஷ் ரெய்னா பேச்சு

ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய மூன்று பேருமே தற்காப்பு விருப்பங்கள் தான். பார்டர் கவாஸ்கர் டிராபியில் பேட்டிங்கில் ஒரு சிறிய நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து கொண்டோம். எங்களுக்கு நம்பர் 8 இடத்தில் பேட்டிங் செய்ய ஒரு பேட்ஸ்மேன் தேவை. எனவே இந்த இடத்திற்கு தகுந்தவாறு நாங்கள் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு பந்துவீச்சாளரை தேர்வு செய்கிறோம். இதுவே இதன் கருப்பொருள் ஆகும். இது ஒரு பெரிய விஷயம் அல்ல, நீங்கள் பேட்டிங்கில் உங்களது நம்பிக்கையை காட்ட வேண்டும். மேலும் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -