இந்திய கிரிக்கெட் வீரரின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி; அது சச்சின் தோனி விராட் கோலி கிடையாது!

0
28245
Sachin

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய பணக்கார வீரர் ஒருவரை பற்றி செய்தி கிடைத்துள்ளது. அவரின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடி. அந்த வீரர் இந்திய கிரிக்கெட்டின் மிகவும் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகிய மூவரில் ஒருவர் கிடையாது.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பணக்கார வீரராக கிரிக்கெட்டில் சம்பாதித்தவராக இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் ஆரம்பத்தில் இருந்தார். அவரது சொத்துக்கள் கிரிக்கெட்டில் சம்பாதித்து நிறைய விரிவடைந்து இருக்கிறது. ஹோட்டல் தொழில் ஈடுபட்டு வந்தார்.

- Advertisement -

இதேபோல் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட வந்து ஆயிரம் கோடிகளை எட்டியதாக தற்போது செய்தி வந்தது. அவருக்கு வீடுகள், கார்கள் மற்றும் பண்ணை வீடுகள், விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் என்று நிறைய முறையில் முதலீடுகள் உள்ளது.

இதேபோல தற்போது இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் சொத்து மதிப்பும் ஆயிரம் கோடிகளை தாண்டியதாக செய்தி வெளிவந்தது. அவர் பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பரதாரராக இருப்பதன் மூலம் மிகப்பெரிய அளவில் சம்பாதித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கிரிக்கெட்டுக்கு வெளியில் பூர்வீகமாக மிகப்பெரிய சொத்தை வைத்திருக்கக் கூடிய வீரராக இருக்கக்கூடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரை பற்றிய தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது.

அவர் பெயர் சமர்ஜித் சிங் கெய்க்வாட். இவர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் 1987 – 88 மற்றும் 1988 – 89 ஆகிய இரண்டு சீசன்களில் ஆறு முதல் தர போட்டிகள் விளையாடி இருக்கிறார். பிறகு பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து, கிரிக்கெட் ஓடு தொடர்ந்து ஈடுபாட்டில் இருந்து வந்தார்.

இவர் அரச குடும்பத்தின் வாரிசு ஆவார். 2013 ஆம் ஆண்டு இவர்களது வாரிசு சொத்துக்கான பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பொழுது இவர் 20 ஆயிரம் கோடிகளுக்கான அதிபதியாக மாறினார்.

அவருக்கு எஸ்டேட் மற்றும் லட்சுமி விலாஸ் மாளிகை, நகைகளின் சேமிப்பில் ஒரு பெரிய பகுதி என கிடைக்க அவருக்கு இவ்வளவு சொத்து மதிப்பு உருவாகியது. இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையை விட லட்சுமி விலாஸ் மாளிகை 4 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

1988ல் பெதேசிங்ராவ் கெய்க்வாட் இறந்ததை அடுத்து, சமர்ஜித் சிங் தந்தை ரஞ்சித் சிங், அவரது சகோதரர் சங்க்கராம் சிங் ஆகியோருக்கு இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது. இதற்கு அடுத்து நீடித்து வந்த அந்த சொத்து பிரச்சினை 2013ஆம் ஆண்டுதான் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தற்பொழுது இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகப்பெரிய பணக்கார சமர்ஜித் சிங்தான்!

- Advertisement -