பாண்டியா சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்த இருவரும் தங்களது சிறு வயது பயிற்சியாளருக்கு கஷ்ட காலத்தில் செய்த நெகிழ்ச்சி செயல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட்டில் தற்போது சிறந்த ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா ஆகியோர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் அவரது சகோதரரான க்ருனால் பாண்டியா ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
மேலும் இவர் இந்திய அணியிலும் சில போட்டிகள் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாண்டியா பிரதர்ஸ் இருவரும் தங்களது சிறு வயது பயிற்சியாளருக்கு ஆரம்பம் முதலே அவர் கஷ்டப்படும் தருணங்களில் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா தனது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பிறகு தனது பயிற்சியாளரான ஜிதேந்திர சிங்கிற்க்கு சுமார் 6 லட்சம் மதிப்பிலான காரை ஒன்றை பரிசாக அளித்தார்.
தனது பயிற்சியாளர் பைக் ஓட்டும்போது விபத்தில் சிக்குவதை விரும்பவில்லை என்று அதற்கான விளக்கமும் அளித்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு பயிற்சியாளரின் சகோதரி திருமணத்திற்கு சுமார் 20 லட்சம் வரை நன்கொடையாக வழங்கினார்கள். அதற்குப் பின்னர் அவரது தாயார் கடுமையான நோய்வாய் பட்ட போது ஹார்த்திக் பாண்டியா தனது போட்டி வருமானம் அனைத்தையும் அவருக்கு ஒப்படைத்தார்.
இதையும் படிங்க:ஒரு கேப்டனா சொல்றன்.. இந்திய டீம்ல இவர்தான் அண்டர்ரேட்டடு பிளேயர்.. எத வேணாலும் செய்வாரு – ரகானே பேச்சு
தற்போது க்ருனால் பாண்டியா இந்த ஆண்டு விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்றது. இந்த நிலையில் பாண்டியா 18 லட்சம் மதிப்பிலான மற்றொரு காரை பரிசாக அளித்து தங்களது நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள். மொத்தமாக தனது பயிற்சியாளருக்கு 70 முதல் 80 லட்சம் வரையில் செலுத்தி தங்களது நன்றியினை தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.






