இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தங்களது கைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடி வருவதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய அணி ஒரு போட்டியும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியும் வெற்றி பெற்று நடையில் மூன்றாவது போட்டியில் டிராவில் முடிவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று ஆடுகளத்திற்கு விளையாட வந்த இந்திய வீரர்களின் கைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்திருப்பது ரசிகர்களிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இந்த கருப்பு நிற பட்டை பொதுவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அல்லது முக்கிய தலைவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களது மறைவை பிரதிபலிக்கும் வகையில் அன்று நடைபெறும் போட்டியில் அவர்களது ஜெர்சியில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடுவார்கள்.
இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பேட்ஜ்
இன்றும் அதுபோல இந்திய வீரர்கள் அணிந்து விளையாட காரணம் என்னவெனில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று உடல் நலக்குறைவினால் காலமானதை தொடர்ந்து அவரது நினைவை பிரதிபலிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அவர்களது கைகளில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். மன்மோகன் சிங் இந்திய முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரோகித்துக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. ஆஸி இந்தியாவை வெச்சு செஞ்சிட்டு இருக்கு – சைமன் கேடிச் விமர்சனம்
இவரது மறைவை ஒட்டி பிசிசிஐ தனது சமூக வலைதளத்தில் “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு தினத்தை ஒட்டி நமது இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்” என்று அறிவித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் மறைவையொட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங் கௌதம் கம்பீர் ஆகியோர் டாக்டர் மன்மோகன் சிங் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 424 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் இந்திய அணி சற்று முன்பு வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது






