இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்போது விளையாடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் நாளை விட இரண்டாவது நாளில் வலுவான நிலையை அடைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் சைமன் காடிச் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியின் அபாயகரமான வீரராக டிராவிஸ் ஹெட்டை பும்ரா டக் அவுட் ஆக்கி வெளியேற்றி இருக்கிறார்.
ஆனால் மற்றொரு மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்மித் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது நேற்றைய நாளை விட ஆஸ்திரேலியா அணி குறுகிய நேரத்தில் அதிக அளவு ரன்கள் குவித்து இருக்கிறது. தற்போது வரை 9 விக்கெட் இழப்புக்கு 472 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணி விளையாடி வரும் நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச் தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
ரோஹித் சர்மா குழப்பத்தில் இருக்கிறார்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி இங்கு வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு இது செயல்திறன் மிக்க கேப்டன்சியாக அமையவில்லை. இது சூழ்நிலையை விமர்சனத்துக்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா குழப்பத்தில் இருப்பது போல தெரிகிறது. இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தற்போது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:13 ஃபோர்ஸ்.. 7 சிக்ஸ்.. தமிழ்நாடு அணி கேப்டன் ஷாருக்கான் அதிரடி சதம்.. ரிங்கு சிங் போராட்டம் வீண்.. விஜய் ஹசாரே டிராபி 2024
இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா அல்லது டிரா செய்யுமா? இல்லையேல் யாரும் எதிர்பாராத வகையில் தோல்வி அடையுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் திரும்ப ஃபார்முக்கு வர வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனெனில் அவர்களது செயல்பாட்டை பொருத்தே இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு அமையும் என்பதால் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.






