சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் ஐபில் 2025 மெகா ஆக்சன் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை கட்டமைத்தது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக இருந்த துஷார்தேஷ் பாண்டே தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கப்பட்டிருப்பதை தொடர்ந்து சிஎஸ்கே அணி குறித்து சில முக்கிய கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலம் 2025
18வது ஐபிஎல் திருவிழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்கள் ஏலம் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட துஷார் தேஷ்பாண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 6.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 31 போட்டிகளில் 39 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சிறந்த பந்துவீச்சு 4-27 ஆகும். இவரது பந்துவீச்சு எகானமி 9.39 ஆக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருக்கும் நிலையில் தேஷ்பாண்டே வெற்றியோ, தோல்வியோ எந்த நிலையில் வந்தாலும் மகேந்திர சிங் டோனி தனக்கு ஆதரவாக இருந்ததாக சில முக்கிய கருத்துகளை கூறுகிறார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிராவிட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருடன் பணிபுரிய ஆர்வமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
மகேந்திர சிங் தோனியை மிஸ் செய்வேன் – தேஷ்பாண்டே
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் மகி பாயை மிஸ் செய்வேன். மோசமான மற்றும் சிறந்த நேரங்களில் அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எடுத்துள்ளதால் அந்த அணிக்காக 100 சதவீத பங்களிப்பை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறேன். இந்திய அணியில் இணைந்து சஞ்சு சாம்சன் கீழ் விளையாடுவதற்கும், இந்தியாவுக்காக அற்புதங்களை நிகழ்த்திய ராகுல் டிராவிட் இடமிருந்து நிறைய கற்றுக் கொள்வதற்கும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க:ஆர்சிபி தோக்கும் போது.. ரசிகர்கள் செஞ்சத நான் மறக்க மாட்டேன்.. முகமது சிராஜ் உணர்ச்சிகரமான பதிவு
எனவே வரும் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேஷ் பாண்டேவை எடுக்க இறுதிவரை போராடிய நிலையில் போதிய பணம் இல்லாத காரணத்தால் இறுதியில் ராஜஸ்தான் அணி எடுத்தது. மேலும் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடிய தீபக் சகாரை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுவரை இந்த இருவரும் சென்னை அணியின் முக்கிய ஒரு அங்கமாக இருந்த நிலையில் தற்போது வேறு அணிகளுக்காக விளையாட இருக்கிறார்கள்.






