ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வீரர்களை எடுக்கும் ஏலம் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற முடிந்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணிக்காக விளையாடிய சிராஜ் தற்போது குஜராத் அணியால் வாங்கப்பட்ட நிலையில் பெங்களூர் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலம்
ஐபிஎல்லில் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சிராஜூக்கு விராட் கோலியுடன் நெருங்கிய நட்பு உண்டு என்பதால் பெங்களூர் அணி ரசிகர்களின் அபிமானமான வீரராக திகழ்ந்தார். மேலும் பெங்களூர் அணிக்கே எனது விசுவாசம் எனவும் மற்ற அணிக்கு விளையாடுவதில் விருப்பம் இல்லை என்று முன்னர் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் குஜராத் அணி அவரை 12.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் முகமது சிராஜ் பெங்களூர் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். பெங்களூர் அணியுடன் விளையாடிய 7 ஆண்டுகள் எனது இதயத்திற்கு நெருக்கமானவை என்றும், வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் ஆதரவாக என்றும் இருந்துள்ளனர் என்று சில கருத்துக்களை கூறுகிறார்.
அனைவருக்கும் நன்றி – முஹமது சிராஜ்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஏழு ஆண்டுகள் எனது இதயத்திற்கு நெருக்கமானவை. ஆர்சிபி அணியுடன் எனது நேரத்தை திரும்பிப் பார்த்தால் காதல், உணர்ச்சி மற்றும் எனது இதயம் நன்றியால் நிறைந்தது. நான் பெங்களூர் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு வீசிய முதல் பந்தில் இருந்து எடுத்த ஒவ்வொரு விக்கெட்டும், விளையாடிய ஒவ்வொரு போட்டியும், உங்களுடன் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு கணமும் அசாதாரணமானவை. ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அசைக்க முடியாத நிலையில் உங்களது ஆதரவு இருந்துள்ளது.
இதையும் படிங்க:13 வயசு பையன.. இந்த விஷயத்துக்குதான் நாங்க வாங்கினோம்.. எங்க முக்கிய இலக்கு அதுதான் – டிராவிட் பேட்டி
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வலிகள் இழப்புகள் இருந்தன. ஆனால் சமூக அரங்கில் உங்கள் குரல் சமூக வலைதளங்களில் உங்கள் கருத்துக்கள், நிலையான நம்பிக்கை ஆகியவை என்னை ஊக்கப்படுத்தியது. நாங்கள் வீழ்ந்த போது உங்களது கண்ணீரை பார்த்திருக்கிறேன். நாங்கள் வெற்றி பெற்ற போது உங்கள் கொண்டாட்டங்களை நான் கண்டேன். உங்களைப் போன்ற ரசிகர் பட்டாளம் இந்த உலகத்தில் இல்லை என்று உங்களுக்கு கூறுகிறேன். உங்களது அர்ப்பணிப்பு, விசுவாசம் என என் வாழ்நாள் முழுவதும் போற்றப்படக்கூடிய ஒன்று. இப்போது நான் என் தொழில் வாழ்க்கையின் புதிய அத்தியாத்தில் அடி எடுத்து வைக்கிறேன்.அனைவருக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.