இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஜோடியாக திகழ்ந்த ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து பல போட்டிகளை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஷிகர் தவான் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ரோகித் சர்மா குறித்தும், ரோகித் சர்மா தவானை பார்க்கும்போது பாடும் பாடல் குறித்தும் சில பசுமையான நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய மூவர் கூட்டணி இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் காலகட்டத்தில் அவர்களுக்கு பதிலாக ஷிகர் தவான், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கூட்டணி இந்திய அணியின் தொடக்க வரிசையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. சில வருடங்களாகவே மிடில் வரிசை பேட்ஸ்மேன்களின் துணை இல்லாமல் பல போட்டிகளை இந்த மூவர் கூட்டணி வென்று கொடுத்திருக்கின்றனர்.
அந்த அளவிற்கு இந்திய அணியின் மிக முக்கியமான பேட்மேன்களாக தவான், ரோஹித் சர்மா ஆகியோர் திகழ்ந்தனர். இந்த நிலையில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வரும் நிலையில், தவான் பேட்டிங் ஃபார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் தவான் நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4ஆம் தேதி அளித்த ஒரு பேட்டியில் ரோகித் சர்மா குறித்து தனது பசுமையான நினைவு வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதில் அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் நானும் ரோகித்தும் 8 முதல் 10 வருடங்களாக தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடி வருவதால் எனக்கும் அவருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது. ரோகித் சர்மா ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் ஒரு குறிப்பிட்ட இந்தி பாடலை பாடும் போது அதை அவர் மிகவும் விரும்புவார். நானும், அவரும் சந்தித்துக் கொள்ளும் வேளையில் அதே பாடலை அவர் என்னை பார்த்து திரும்ப பாடிக் காட்டுவார்.
இந்த ஒரு நிகழ்வு அடிக்கடி எங்களுக்குள் அவ்வப்போது நடக்கும். அவருக்கு அந்தப் பாடலின் ஒரு சில வரிகள் நினைவுக்கு வரும்போது அதை சிரித்தவாறே பாடுவார். அது ஒரு மகிழ்வான தருணமாக இருக்கும்” என்று தவான் கூறியிருக்கிறார். ரோகித் மற்றும் தவான் கூட்டணி இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 5148 ரன்கள் ஜோடியாக குவித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:என்ன செய்யறதுனு எனக்கு நல்லா தெரியும்.. பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை – ரோகித் சர்மா முடிவு
45.55 பேட்டிங் ஆவரேஜில் இருவரும் இந்திய அணிக்காக 18 சதங்கள் விளாசி இருக்கின்றனர். ரோஹித் குறித்து விராட் கோலி எங்களது புரிதல் மற்றும் விளையாட்டின் மீது உள்ள எங்கள் பார்வை ஆகியவை ஒரே மாதிரியாக இதுவரை இருந்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.